/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
தேங்கல்பாளையம் சுத்திகரிப்பு நிலைய பணிகள் ஆய்வு
/
தேங்கல்பாளையம் சுத்திகரிப்பு நிலைய பணிகள் ஆய்வு
ADDED : செப் 05, 2025 01:17 AM
வெண்ணந்துார், வெண்ணந்துார் அடுத்த அத்தனுார் டவுன் பஞ்.,க்கு உட்பட்ட வீடுகள், ஹோட்டல்கள், பேக்கரி, டீக்கடை, தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், அப்பகுதியில் உள்ள ஏரி குட்டை ஆகிய பகுதிகளில் தேங்கியது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக கூறிய மக்கள், இப்பகுதியில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டும் என, நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க., செயலர் ராஜேஷ்குமார் எம்.பி., மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தனிடம் மனு அளித்தனர்.
இந்நிலையில், ஆட்டையாம்பட்டி பிரிவு ரோடு அருகில் தேங்கல்பாளையம் செல்லும் சாலையில், 2 ஏக்கர் நிலத்தில் கசடு கழிவு மேலாண்மை செயலாக்க திட்டத்தின் கீழ், 11 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு, கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை நேற்று, கலெக்டர் துர்கா மூர்த்தி ஆய்வு மேற்கொண்டார். அப்போது ஒப்பந்ததாரர்கள், பேரூராட்சி அலுவலர்களிடம் கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் எனவும், தரமான பொருட்களை கொண்டு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்.
டவுன் பஞ்., செயல் அலுவலர் விஜயன், தாசில்தார் சசிகுமார், செயற்பொறியாளர்கள் கலந்து கொண்டனர்.