/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
சூதாட்டத்தை தடுக்க தவறியஇன்ஸ்பெக்டர் பணியிடம் மாற்றம்
/
சூதாட்டத்தை தடுக்க தவறியஇன்ஸ்பெக்டர் பணியிடம் மாற்றம்
சூதாட்டத்தை தடுக்க தவறியஇன்ஸ்பெக்டர் பணியிடம் மாற்றம்
சூதாட்டத்தை தடுக்க தவறியஇன்ஸ்பெக்டர் பணியிடம் மாற்றம்
ADDED : ஏப் 17, 2025 02:08 AM
திருச்செங்கோடு:திருச்செங்கோடு, மலையடிவாரத்தில் சூதாட்டம் நடப்பதாக, எஸ்.பி., ராஜேஸ்கண்ணனுக்கு புகார் வந்தது. இதையடுத்து, நேற்று அதிகாலை, 2:30 மணிக்கு சூதாட்டம் நடக்கும் இடத்திற்கு நேரடியாக சென்ற அவர், சூதாட்டக்காரர்களை சுற்றி வளைத்தார்.
பின், திருச்செங்கோடு போலீசாரை சம்பவ இடத்திற்கு வரவழைத்து, நான்கு டூவீலர், இரண்டு கார், நான்கு லட்சம் ரூபாய் ரொக்கப் பணத்தை கைப்பற்றினர்.
மேலும், திருச்செங்கோட்டை சேர்ந்த தாமோதரன், 27, திலீப், 25, பாரத், 33, ஆனந்தவேல், 46, கிருஷ்ணன், 45, ராஜா, 37, ஜெயந்தி, 48 வீட்டு உரிமையாளர், நல்லமூக்கான்பட்டி ரகுபதி, 45, பாண்டிச்சேரி கார்த்திகேயன், 35, தலைவாசல் கிருஷ்ணமூர்த்தி, 45, ஓமலுார் கிருஷ்ணன், 43, சங்ககிரி ராஜேஸ், 43, நடராஜன், 42, ஈரோடு, வீரப்பன்சத்திரம் கார்த்தி, 33, பெரியவலசு கவுரிசங்கர், 28, பாப்பிரெட்டிப்பட்டி சங்கர், 52, சேலம், சிவதாபுரம் ராஜா, 54, குரங்குசாவடி சூர்யா, 32, சங்ககிரி பூமாலை, 25, அருள் ஆகியோரை கைது செய்தனர். மேலும், வெப்படை சக்திவேல், லோகேஸ்வரன் ஆகியோர் தலைமைறைவாகினர்.
இந்நிலையில், திருச்செங்கோடு நகரின் மைய பகுதியில், பொதுமக்கள் நடமாட்டம் அதிகமுள்ள மலையடிவார பகுதியில் சூதாட்டம் நடப்பதை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்காத, திருச்செங்கோடு டவுன் இன்ஸ்பெக்டர் வெங்கட்ராமனை, ஆயுதப்படைக்கு பணியிட மாறுதல் வழங்கி உத்தரவிட்டார். இந்த
சம்பவம், போலீசார் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.