/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மாவட்டத்தில் நான்கு இடங்களில் ரூ.8.32 கோடியில் அறிவுசார் மையம்
/
மாவட்டத்தில் நான்கு இடங்களில் ரூ.8.32 கோடியில் அறிவுசார் மையம்
மாவட்டத்தில் நான்கு இடங்களில் ரூ.8.32 கோடியில் அறிவுசார் மையம்
மாவட்டத்தில் நான்கு இடங்களில் ரூ.8.32 கோடியில் அறிவுசார் மையம்
ADDED : ஜன 06, 2024 01:09 PM
நாமக்கல்: நாமக்கல் நகராட்சிக்குட்பட்ட, முல்லை நகர் மற்றும் மோகனுார் டவுன் பஞ்.,ல், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மூலம், 3.49 கோடி ரூபாய் மதிப்பில், நவீன வசதிகளுடன் கூடிய அறிவுசார் மையம் மற்றும் நுாலகம் அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல், 5.70 கோடியில், தினசரி சந்தை அமைக்கப்பட்டுள்ளது. அதன் திறப்பு விழா, நேற்று நடந்தது. சென்னையில் இருந்து முதல்வர் ஸ்டாலின், வீடியோ கான்பரன்ஸ் மூலம் திறந்து வைத்தார்.
நாமக்கல் அறிவுசார் மையத்தில் நடந்த நிகழ்ச்சியில், நகராட்சி சேர்மன் கலாநிதி, துணைத்தலைவர் பூபதி, கமிஷனர் சென்னு கிருஷ்ணன், கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.மோகனுார் டவுன் பஞ்சாயத்தில் முன்னாள் ஒன்றிய சேர்மன் நவலடி, டவுன் பஞ்., தலைவர் வனிதா, துணைத்தலைவர் சரவணகுமார், முன்னாள் சேர்மன் உடையவர், தாசில்தார் மணிகண்டன், செயல் அலுவலர் கோமதி, அரசுத்துறை அலுவலர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.
.இதேபோல், திருச்செங்கோடு நகராட்சி சந்தைப்பேட்டை பகுதியில், 1.89 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள அறிவு சார் மையத்தையும், கொல்லப்பட்டியில், 35 லட்சம் ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள நகராட்சி பூங்காவையும், முதல்வர் காணொலியில் திறந்து வைத்தார். எம்.எல்.ஏ., ஈஸ்வரன், நாமக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க., செயலாளர் மதுராசெந்தில், நகராட்சி தலைவர் நளினிசுரேஷ்பாபு மற்றும் நகராட்சி கவுன்சிலர்கள் குத்து
விளக்கு ஏற்றி துவக்கி வைத்தனர்.
.குமாரபாளையத்தில் உள்ள வாரச்சந்தை திடலில், கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தில், 1.92 கோடி ரூபாயில் அறிவுசார் மையம் திறக்கப்பட்டது. குமாரபாளையம் நகராட்சி தலைவர் விஜய்கண்ணன், நகராட்சி பொறியாளர் ராஜேந்திரன், நகர துணைத்தலைவர் வெங்கடேசன் உள்ளிட்டோர் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தனர்.
.ராசிபுரத்தில், 2.43 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தினசரி சந்தை கட்டப்பட்டுள்ளது. அதேபோல், பட்டணம் டவுன் பஞ்.,ல், 1.12 கோடி ரூபாய் மதிப்பில் நுாலகம் மற்றும் அறிவுசார் மையம் கட்டப்பட்டுள்ளது.
முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், கலெக்டர் உமா, ஒன்றியக்குழு தலைவர் ஜெகநாதன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சங்கர், நகராட்சி ஆணையர் சேகர், பட்டணம் டவுன் பஞ்., தலைவர் போதம்மாள், துணைத்தலைவர் பொன் நல்லதம்பி உள்படபலர் கலந்து கொண்டனர்.