/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
துார்வாராத கழிவுநீர் வாய்க்கால் கலெக்டர் உத்தரவால் பணி தீவிரம்
/
துார்வாராத கழிவுநீர் வாய்க்கால் கலெக்டர் உத்தரவால் பணி தீவிரம்
துார்வாராத கழிவுநீர் வாய்க்கால் கலெக்டர் உத்தரவால் பணி தீவிரம்
துார்வாராத கழிவுநீர் வாய்க்கால் கலெக்டர் உத்தரவால் பணி தீவிரம்
ADDED : ஆக 12, 2024 07:01 AM
நாமக்கல்: நாமக்கல், வேட்டாம்பாடி பஞ்சாயத்தில், 3 கி.மீ., துாரத்திற்கு, நாமக்கல் நகராட்சி பகுதியில் இருந்து செல்லும் கழிவுநீர் வாய்க்கால் செல்கிறது.
வேட்டாம்படி பஞ்.,க்குட்பட்ட வீசாணம் செல்லும் சாலையில், இந்த கழிவு நீர் வாய்க்கால் அமைந்துள்ளது.நாமக்கல் - சேந்தமங்கலம் பிரதான சாலையில் அமைந்துள்ள இந்த கழிவுநீர் கால்வாயில், அடிக்கடி அடைப்பு ஏற்பட்டு, சாக்கடை நீர் தேங்கி, துர்நாற்றம் வீசுகிறது.மேலும், இவ்வழியாக இருசக்கரம், நான்கு சக்கர வாகனங்களில் செல்வோர், பள்ளி மாணவ, மாணவியர், துர்நாற்றத்தை தாங்க முடியாமல், மூக்கை பிடித்து செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.இதுகுறித்து, அப்பகுதி மக்கள் பஞ்., நிர்வாகத்திற்கு புகாரளித்தனர். இருந்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், அதிருப்தியடைந்த பொசதுமக்கள், நாமக்கல் கலெக்டரிடம் புகார் தெரிவித்தனர். தொடர்ந்து, அப்பகுதியில் கலெக்டர் ஆய்வு செய்து, துார்வார உத்தரவிட்டார். இதையடுத்து, வேட்டாம்பாடி பஞ்.,ல் உள்ள கழிவுநீர் வாய்க்காலை சுத்தப்படுத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.