/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
சமையல் உதவியாளர் பதவிக்கு நாமக்கல்லில் நேர்முக தேர்வு
/
சமையல் உதவியாளர் பதவிக்கு நாமக்கல்லில் நேர்முக தேர்வு
சமையல் உதவியாளர் பதவிக்கு நாமக்கல்லில் நேர்முக தேர்வு
சமையல் உதவியாளர் பதவிக்கு நாமக்கல்லில் நேர்முக தேர்வு
ADDED : ஜூன் 13, 2025 01:37 AM
நாமக்கல், நாமக்கல்லில், சமையல் உதவியாளர்
பதவிக்கான நேர்முக தேர்வு டி.ஆர்.ஓ.,
தலைமையில் நடந்தது.
நாமக்கல் மாவட்டத்தில், சத்துணவு மையங்களில் காலியாக உள்ள சமையல் உதவியாளர் பதவியை நிரப்ப, கடந்த சில மாதங்களுக்கு முன் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. தற்போது இந்த பணியிடங்களை நிரப்புவதற்கான நேர்முக தேர்வு நடந்து வருகிறது. நாமக்கல், ராசிபுரம் மற்றும் எலச்சிபாளையம் வட்டார வளர்ச்சி அலுவலகங்களில், நேற்று சமையல் உதவியாளர்களுக்கான நேர்முக தேர்வு நடந்தது. நாமக்கல்லில் நடந்த தேர்வுக்கு டி.ஆர்.ஓ., சுமன் தலைமை தாங்கி, விண்ணப்பத்தாரர்
களிடம் கேள்விகளை எழுப்பினார்.
நாமக்கல் ஒன்றியத்தில் மொத்தம், 30 பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த பணியிடங்களுக்கு 87 பேர் விண்ணப்பம் செய்து இருந்தனர். இவர்களில் தகுதியான, 53 பேருக்கு நேர்முக தேர்வுக்கு அழைப்பு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.