/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
4 கென்ய நாட்டு வாலிபர்களிடம் விசாரணை
/
4 கென்ய நாட்டு வாலிபர்களிடம் விசாரணை
ADDED : நவ 04, 2024 11:09 PM
பள்ளிப்பாளையம் ; நாமக்கல் மாவட்டம், பள்ளிப்பாளையம் அருகே, அன்னை சத்யா நகரில் தமிழ்நாடு அடுக்குமாடி குடியிருப்பு 'சி' பிளாக்கில், 150ம் எண் கொண்ட வீட்டை வாடகைக்கு எடுத்து, 'டெக்ஸ்டைல் பிசினஸ்' செய்வதாக கூறி, இரண்டு மாதமாக கென்யா நாட்டை சேர்ந்த இளைஞர்கள், நான்கு பேர் வசித்து வந்தனர்.
இந்நிலையில், சென்னை பாஸ்போர்ட் அலுவலக போலீசார், ஐந்து பேர், நேற்று அதிகாலை கென்யா இளைஞர்கள் தங்கியிருந்த வீட்டிற்குள் சென்று வீடு முழுதும் தீவிர சோதனை நடத்தினர்.
முதல்கட்ட விசாரணையில், பாஸ்போர்ட், விசா உள்ளிட்ட எந்த ஆவணங்களும் அவர்களிடம் இல்லாதது தெரிய வந்தது. மக்கள் நடமாட்டம் அதிகம் காணப்பட்டதால், அங்கு வசிக்கும் மக்களுக்கு எந்த இடையூறுமின்றி, கதவை பூட்டி வீட்டிற்குள்ளேயே தொடர்ந்து அவர்களிடம் விசாரித்து வருகின்றனர். விசாரணை முடிந்த பிறகே முழு விபரம் தெரியவரும் என, பள்ளிப்பாளையம் போலீசார் தெரிவித்தனர்.