/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கே.எஸ்.ஆர்., கல்வி நிறுவனத்தின் புதிய சின்னம் 'ப்ளாரியான்' அறிமுகம்
/
கே.எஸ்.ஆர்., கல்வி நிறுவனத்தின் புதிய சின்னம் 'ப்ளாரியான்' அறிமுகம்
கே.எஸ்.ஆர்., கல்வி நிறுவனத்தின் புதிய சின்னம் 'ப்ளாரியான்' அறிமுகம்
கே.எஸ்.ஆர்., கல்வி நிறுவனத்தின் புதிய சின்னம் 'ப்ளாரியான்' அறிமுகம்
ADDED : பிப் 18, 2024 10:50 AM
திருச்செங்கோடு: திருச்செங்கோடு கே.எஸ்.ஆர்., கல்வி குழுமம் சார்பில், தேசிய அளவிலான தொழில்நுட்ப கலை திருவிழா, 'ரங்உத்சவ்-24' நடந்தது. இரண்டாம் நாளில், 'ரங்விகாஸ்' எனும் நிகழ்வில் தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் சார்ந்த பயிலரங்குகள் மற்றும் கண்காட்சி நடந்தது. இதில் இணைய குற்ற பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு, ஆய்வு
கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டன. தொடர்ந்து, ரங்மஹிழ், ரங்ஹீல், ரங்சித்தர், ரங்மஜா நிகழ்ச்சிகள் என, 60 வகை நிகழ்வுகள் கல்லுாரி
வளாகத்தின் பல்வேறு இடங்களில் நடந்தன.
முக்கிய நிகழ்ச்சியாக, கே.எஸ்.ஆர்., கல்வி நிறுவனத்தின் புதிய அத்தியாயமாக, 'ப்ளாரியான்' எனும் சின்னம் காட்சிப்படுத்தப்பட்டது. இது பீனிக்ஸ் பறவையை போன்று கே.எஸ்.ஆர்., கல்வி நிறுவனத்தின் இனிவரும் காலத்திற்கான பல்துறை சார்ந்த புதிய அறிவு, ஒற்றுமை, மகிழ்ச்சி, பெருமிதம், தனித்துவம் என புதிய பாதையின் தொடக்கமாக இருக்கும் என, கே.எஸ்.ஆர்., கல்வி நிறுவனங்களின் தலைமை நிர்வாக அலுவலர் அகிலாமுத்துராமலிங்கம் தெரிவித்தார். கே.எஸ்.ஆர்., கல்வி நிறுவனங்களின் தாளாளர் சீனிவாசன் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் கே.எஸ்.ஆர்., தொழில்நுட்ப கல்லுாரி முதல்வர் கோபாலகிருஷ்ணன், கே.எஸ்.ஆர்., கல்வி நிறுவனங்களின் அனைத்து கல்லுாரி முதல்வர்கள் மற்றும் இயக்குனர்கள் கலந்துகொண்டனர்.