/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ஓரின சேர்க்கை விவகாரம் அரசு பள்ளியில் விசாரணை
/
ஓரின சேர்க்கை விவகாரம் அரசு பள்ளியில் விசாரணை
ADDED : நவ 22, 2025 02:29 AM
பள்ளிப்பாளையம், பள்ளிப்பாளையம் அருகே, விளாங்காட்டூர் பகுதியில் அரசு நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் சுற்று வட்டாரத்தை சேர்ந்த மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். கடந்த, 17 அன்று, ஏழாம் -வகுப்பு மாணவர், இதே பள்ளியில் நான்காம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து, தலைமை ஆசிரியர், மாணவர்களிடம் விசாரணை நடத்தி, இரண்டு மாணவர்களின் பெற்றோர்களை அழைத்து, 'டிசி' வழங்கியுள்ளனர்.
இதையடுத்து, பாதிக்கப்பட்ட, 4ம், வகுப்பு மாணவரின் பெற்றோர் அளித்த புகார்படி, பள்ளிப்பாளையம் போலீசார், நேற்று காலை, 10:00 மணி முதல் விளாங்காட்டூர் அரசு பள்ளியில் சம்பந்தப்பட்ட மாணவர்களிடம், பள்ளி ஆசிரியர்கள், மாணவர்களின் பெற்றோர் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தினர்.

