/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பி.எஸ்.என்.எல்., வாடிக்கையாளர் சேவை மைய உரிமம் பெற அழைப்பு
/
பி.எஸ்.என்.எல்., வாடிக்கையாளர் சேவை மைய உரிமம் பெற அழைப்பு
பி.எஸ்.என்.எல்., வாடிக்கையாளர் சேவை மைய உரிமம் பெற அழைப்பு
பி.எஸ்.என்.எல்., வாடிக்கையாளர் சேவை மைய உரிமம் பெற அழைப்பு
ADDED : நவ 21, 2025 03:05 AM
சேலம், செவ்வாய்ப்பேட்டை, மேட்டூர் ஆர்.எஸ்., திருச்செங்கோடு, ராசிபுரம் பகுதிகளில், பி.எஸ்.என்.எல்., வாடிக்கையாளர் சேவை மைய உரிமம் பெற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சேலம் பி.எஸ்.என்.எல்., பொது மேலாளர் ரவீந்திர பிரசாத் அறிக்கை: சேலம், தர்மபுரி மண்டலத்தில் செயல்படும், பி.எஸ்.என்.எல்., வாடிக்கையாளர்கள் சேவை மையங்கள் மூலம், 'சிம் கார்டு, ரீசார்ஜ் கூப்பன்' விற்பனை, தொலைபேசி பில் கட்டண வசூல், புது எப்.டி.டி.ஹெச்., முன்பதிவு, ஆதார் சேவை உள்ளிட்ட, பி.எஸ்.என்.எல் சேவைகளை வழங்க உரிமம் வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி சேலம் செவ்வாய்ப்பேட்டை, மேட்டூர் ஆர்.எஸ்., திருச்செங்கோடு, ராசிபுரம் ஆகிய, 4 பகுதிகளில் உரிமம் பெற்ற சேவை மையங்கள் அமைக்க, குறைந்தபட்சம் ஓராண்டு சேவை மையம் நடத்திய அனுபவமுள்ள, தனியார் நிறுவனங்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்ப படிவம், விண்ணப்பிக்கும் முறைகள் குறித்து, www.tenter.bsnl.co.in அல்லது https.//www.etenters.gov.in/eprocure/app இணைய தளங்களில் தெரிந்து கொள்ளலாம். விபரங்களுக்கு, சேலம் விற்பனை பிரிவு, உதவி பொது மேலாளரை, 0427 - 2311414 என்ற எண்ணில் அழைக்கலாம்.

