/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
உரம் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து
/
உரம் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து
ADDED : நவ 21, 2025 03:04 AM
ராசிபுரம், ராசிபுரம் அருகே, தேசிய நெடுஞ்சாலையில் உரம் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
துாத்துக்குடி மாவட்டத்திலிருந்து, 30 டன் யூரியா, உரம் ஏற்றிக்கொண்டு டாரஸ் லாரி நேற்று காலை கிருஷ்ணகிரி நோக்கி வந்து கொண்டிருந்தது. லாரியை டிரைவர் முகமது உசேன், 40, ஓட்டி வந்தார்.
ராசிபுரம் அடுத்த முத்துகாளிபட்டி அருகே வரும்போது, சேலம்-நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, சாலையோர தடுப்பு சுவரில் மோதி கவிழ்ந்தது. விபத்தில் லாரியின் பின்புற டயர்கள் மற்றும் டீசல் டேங்க் அனைத்துமே நசுங்கியது. லாரியின் ஒருபுறம் அந்தரத்தில் தொங்கி நின்றது. விபத்தில் டிரைவர் உசேன் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார்.
தகவலறிந்த ராசிபுரம் தீயணைப்பு வீரர்கள், விபத்து நடந்த இடத்திற்கு வந்து தீ விபத்து ஏற்படாமல் இருக்க தண்ணீர் அடித்தனர். நெடுஞ்சாலையில் ஏற்பட்ட விபத்தில், 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

