/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கால்வாயில் தேங்கி நிற்கும் கழிவுநீரால் மக்கள் அவதி
/
கால்வாயில் தேங்கி நிற்கும் கழிவுநீரால் மக்கள் அவதி
கால்வாயில் தேங்கி நிற்கும் கழிவுநீரால் மக்கள் அவதி
கால்வாயில் தேங்கி நிற்கும் கழிவுநீரால் மக்கள் அவதி
ADDED : நவ 21, 2025 03:03 AM
வெண்ணந்துார் : வெண்ணந்துார் டவுன் பஞ்., பகுதியில், கால்வாயில் தேங்கி நிற்கும் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.
வெண்ணந்துார் டவுன் பஞ்., நெசவாளர் தெரு பகுதியில், கால்வாயில் குப்பை தேங்கி அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதில் மின்னக்கல் சாலை, நெசவாளர் தெரு பகுதியில் சேகரமாகும் குப்பைகள் தேங்கி அடைத்து கொள்கிறது. கால்வாய் துார்வாரப்படாததால் சில இடங்களில் செடி, கொடிகள் வளர்ந்து புதர்போல் காட்சியளிக்கிறது. இதனால் இந்த பகுதியில் கழிவுநீர் செல்ல வழியில்லாமல் தேங்கி நின்று துர்நாற்றம் வீசுகிறது. மேலும் இப்பகுதி மக்கள் சிலர், கால்வாய் அருகே குப்பைகளை கொட்டி செல்கின்றனர்.
எனவே, கால்வாய் அடைப்பை சரி செய்து கழிவுநீர் சீராக செல்லவும், அப்பகுதியில் கொட்டப்பட்டுள்ள குப்பைகளை அப்புறப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.