/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
தார்ச்சாலை அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு
/
தார்ச்சாலை அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு
ADDED : நவ 21, 2025 02:56 AM
குமாரபாளையம், குமாரபாளையத்தில், தார்ச்சாலை அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், சாலை அமைக்காமல் வாகனங்கள் திரும்பிச் சென்றன.
குமாரபாளையம் நகராட்சிக்கு உட்பட்ட சுந்தரம் நகரில், நேற்று தார்ச்சாலை அமைப்பதற்காக நகராட்சி அதிகாரிகள் வாகனங்களை கொண்டு வந்தனர். அப்போது திரண்ட அப்பகுதி மக்கள், சாலை நன்றாக உள்ளது. எதற்காக சாலை அமைக்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பியதுடன், ஏற்கனவே சாலை அமைக்கும்போது, சாலையை தோண்டாமல் மேலோட்டமாக போட்டு செல்வதால், சாலையின் உயரம் அதிகரித்து வருகிறது.
இதனால் குடியிருப்பு பகுதிகள் பள்ளமாக மாறிவிட்டன. சாலைகளில் செல்லும் மழைநீர் வீடுகளுக்குள் புகுந்து விடுகின்றன. சாலை பணி செய்ய வேண்டுமானால், பழைய சாலைகளை தோண்டி தரமான சாலை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து, சாலை அமைக்கும் பணியை தடுத்தனர்.குமாரபாளையம் நகராட்சி ஆணையாளர் ரமேஷ், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து, சாலை அமைக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக கூறி, வாகனங்களை திரும்ப எடுத்துச் சென்றனர். பொதுமக்கள் போராட்டம் காரணமாக, சாலை அமைக்கும் பணியை நகராட்சி நிர்வாகம் கைவிட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

