/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மா.திறனாளி குழந்தைகளுக்கு இலவச மருத்துவ முகாம்
/
மா.திறனாளி குழந்தைகளுக்கு இலவச மருத்துவ முகாம்
ADDED : நவ 21, 2025 02:56 AM
நாமக்கல், நாமக்கல் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான, இலவச மருத்துவ முகாம் இன்று (நவ., 21ல்) துவங்கி டிச.,16 வரை நடக்கிறது.
ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மற்றும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல மைய இணையம் இணைந்து மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான, இலவச மருத்துவ முகாம், பிறப்பு முதல் 18 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு, இன்று (நவ., 21) ராசிபுரம் அண்ணாசாலை, அரசு மேல்நிலைப்பள்ளி, 22ல் புதுச்சத்திரம் களங்கானி அரசு மேல்நிலைப்பள்ளி. 24ல் எலச்சிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி. 25ல் எருமப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, 28ம் தேதி திருச்செங்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, டிச., 1ல் நாமகிரிபேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, 2ல் நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடக்கிறது.
டிச., 4 வெண்ணந்துார் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, 5ல் மல்லசமுத்திரம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, 8ல், மோகனுார் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, 9ல் பள்ளிபாளையம் ஆவாரங்காடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, 12ல் பரமத்தி அரசு மேல்நிலைப்பள்ளி, 16ல் கொல்லிமலை அரசு மாதிரிப்பள்ளியில் முகாம் நடைபெறுகிறது.
முகாமில் மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ சான்று, தேசிய அடையாள அட்டை, தனித்துவம் வாய்ந்த தேசிய அடையாள அட்டை, இலவச ரயில் மற்றும் பஸ் பயண சலுகை, உதவி உபகரணங்களுக்கான பதிவு, உதவி தொகை காண பதிவுகள் செய்யப்பட உள்ளது.
ஏற்பாடுகளை, மாவட்ட மாற்றுத்திறனாளி நலத்துறை அலுவலர் கலைச்செல்வி, உதவி திட்ட அலுவலர் அருள்தாஸ், மாவட்ட சிறப்பு குழந்தைகள் ஒருங்கிணைப்பாளர் கோமதி ஆகியோர் செய்துள்ளனர்.

