/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ஓடையில் பாய்ந்த சாயக்கழிவுநீர் ரகசிய குழாய் உள்ளதா என ஆய்வு
/
ஓடையில் பாய்ந்த சாயக்கழிவுநீர் ரகசிய குழாய் உள்ளதா என ஆய்வு
ஓடையில் பாய்ந்த சாயக்கழிவுநீர் ரகசிய குழாய் உள்ளதா என ஆய்வு
ஓடையில் பாய்ந்த சாயக்கழிவுநீர் ரகசிய குழாய் உள்ளதா என ஆய்வு
ADDED : அக் 16, 2025 01:25 AM
பள்ளிப்பாளையம், பள்ளிப்பாளையம் சுற்று வட்டாரத்தில் ஏராளமான சாய ஆலைகள் செயல்படுகின்றன. இந்த சாய ஆலைகளில் இருந்து விதிமீறி சாயக்கழிவுநீரை நேரடியாக வெளியேற்றப்படுவதால், இந்த சாயக்கழிவுநீர் ஆற்றில் கலந்து தண்ணீர் மாசடைகிறது.
மாசடைந்த ஆற்று தண்ணீரை மக்கள் பயன்படுத்தும்போது சேன்சர், தோல் அலர்ஜி உள்ளிட்ட உடல் சார்ந்த பிரச்னை ஏற்படுகிறது. விதிமீறி செயல்படும் சாயஆலைகள மீது, மாசு கட்டுப்பாட்டுவாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தாலும், சில நாட்களில் மீண்டும் சாய ஆலைகள் செயல்படும்.
இந்நிலையில், நேற்று மதியம் ஆவத்திபாளையம் பகுதியில் செல்லும் ஓடையில், சிவப்பு நிறத்தில் சாயக்கழிவுநீர் வெளியேற்றப்பட்டது. இதை பார்த்த அப்பகுதி மக்கள், அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர்.
இதையடுத்து, குமாரபாளையம் மாசு கட்டுப்பாட்டு வாரியம், வருவாய் துறை அதிகாரிகள், சம்பந்தப்பட்ட பகுதிக்கு நேரில் வந்தனர். தொடர்ந்து, சாயக்கழிவுநீர் எந்த சாய ஆலைகளில் இருந்து வெளியேற்றப்படுகிறது என, அப்பகுதியில் உள்ள சாய ஆலைகளுக்கு சென்று ஆய்வு செய்தனர்.