/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ராயல் இன்டர்நேஷனல் பள்ளியில் முதலீட்டு விழா
/
ராயல் இன்டர்நேஷனல் பள்ளியில் முதலீட்டு விழா
ADDED : ஜூன் 29, 2025 12:52 AM
குமாரபாளையம் குமாரபாளையம் ராயல் இன்டர்நேஷனல் சி.பி.எஸ்.இ., பள்ளியில்
முதலீட்டு விழா, தாளாளர்
அன்பழகன் தலைமையில் நடந்தது. செயலாளர் முருகேசன், பொருளாளர் கவிதா ஆனந்தன், முதல்வர் ராஜஸ்ரீ உள்பட பலர் குத்துவிளக்கேற்றி விழாவை துவக்கி வைத்தனர்.
சிறப்பு விருந்தினராக, குமாரபாளையம் இன்ஸ்பெக்டர் தவமணி பங்கேற்று, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள், அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கு பரிசு வழங்கி வாழ்த்தினார்.
தொடர்ந்து அவர் பேசுகையில், ''கஷ்டப்பட்டு படிக்க வைக்கும் பெற்றோருக்கு மதிப்பு கொடுக்க வேண்டும். அவர்கள் கொடுக்கும் கல்வியை நல்லபடி கவனத்துடன் படித்து அதிக மதிப்பெண் பெற்று வாழ்வில் நல்ல நிலையை அடைய வேண்டும். வாழ்வில் நேர்மையை கடைப்பிடிக்க வேண்டும். மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும்,'' என்றார்.
பள்ளியின் சேவை பணிகளுக்கு ஆகாஷ், அக்னி, ஜல், ஹவா ஆகிய நான்கு அணிகள் ஏற்படுத்தப்பட்டு, அவைகளின் நிர்வாகிகளுக்கு பேட்ச் அணிவிக்கப்பட்டது.
செயலாளர் முருகேசன், பொருளாளர் கவிதா ஆனந்தன், பள்ளி முதல்வர் ராஜஸ்ரீ உள்பட பலர்
பங்கேற்றனர்.