/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி இணையதளம் மூலம் விண்ணப்பிக்க அழைப்பு
/
முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி இணையதளம் மூலம் விண்ணப்பிக்க அழைப்பு
முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி இணையதளம் மூலம் விண்ணப்பிக்க அழைப்பு
முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி இணையதளம் மூலம் விண்ணப்பிக்க அழைப்பு
ADDED : ஜூலை 20, 2025 07:52 AM
நாமக்கல்: 'முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டியில் பங்கேற்க விருப்பம் உள்ளவர்கள், இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்' என, நாமக்கல் கலெக்டர் துர்கா மூர்த்தி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழக துணை முதல்வர் உதயநிதி, கடந்த, 17ல், 37 கோடி ரூபாய் பரிசுத்தொகை கொண்ட, 2025ம் ஆண்டு முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகளுக்கு இணையதளம் மூலமான முன்பதிவை தொடங்கி வைத்தார்.
தமிழகத்தை, இந்தியாவின் விளையாட்டு தலைநகரமாக உருவாக்கி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள் மற்றும் அரசு பணியாளர்கள் பங்கேற்கும் வகையில், முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி நடத்தப்படுகிறது.
இந்தாண்டு, 'முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு போட்டி-2025' அனைத்து மாவட்ட மற்றும் மண்டல அளவில் வரும், ஆக., 22 முதல், செப்., 12 வரை நடக்கிறது. தனி நபர் போட்டிகளில், மாநில அளவில் வெற்றி பெறுபவர்களுக்கு, முதல் பரிசாக, ஒரு லட்சம் ரூபாய், இரண்டாம் பரிசு, 75,000 ரூபாய், மூன்றாம் பரிசு, 50,000 ரூபாய் வழங்கப்படும். குழு போட்டிகளில் மாநில அளவில் வெற்றி பெறுபவர்களுக்கு, முதல் மூன்று பரிசு முறையே, 75,000, 50,000, 25,000 ரூபாய் வழங்கப்படும். இப்போட்டிகளில் வழங்கப்படும் சான்றுகள் மூலம், சிறப்பு மதிப்பெண் மற்றும் சலுகைகள் பெற இயலும்.
தமிழகம் முழுவதும், 6ம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை பயிலும், 19 வயதிற்குட்பட்ட பள்ளி மாணவர்களுக்கும், 25 வயதிற்குட்பட்ட கல்லுாரி மாணவர்களுக்கும், 15 முதல், 35 வரை பொதுப்பிரிவினருக்கும், அனைத்து வயது மாற்றுத்திறனாளிகளுக்கும், தமிழக அரசு மற்றும் அரசு நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பணியாளர்கள், மத்திய அரசு பணியாளர்கள் ஆகியோருக்கும் விளையாட்டு போட்டி நடத்தப்படுகிறது. விளையாட்டில் ஆர்வம் உள்ள அனைவரும் https://cmtrophy.sdat.in / https://sdat.tn.gov.in என்ற இணையதளம் மூலம் முன்பதிவு செய்து விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்ளலாம். முன்பதிவு செய்ய கடைசி நாள், வரும் ஆக., 16, மாலை, 6:00 மணி. விபரங்களுக்கு, தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின், மாவட்ட அலுவலகங்களை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.