sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

சுதந்திர போராட்ட ஆவணங்களை அருங்காட்சியகத்திற்கு வழங்க அழைப்பு

/

சுதந்திர போராட்ட ஆவணங்களை அருங்காட்சியகத்திற்கு வழங்க அழைப்பு

சுதந்திர போராட்ட ஆவணங்களை அருங்காட்சியகத்திற்கு வழங்க அழைப்பு

சுதந்திர போராட்ட ஆவணங்களை அருங்காட்சியகத்திற்கு வழங்க அழைப்பு


ADDED : ஜூலை 05, 2024 12:21 AM

Google News

ADDED : ஜூலை 05, 2024 12:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்: நாமக்கல் கலெக்டர் உமா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:அருங்காட்சியகங்கள் துறை சார்பில், விடுதலை போராட்டத்தில் தமிழகத்தின் தியாகத்தையும் பங்களிப்பையும் போற்றும் வகையில் அமையவுள்ள, அருங்காட்சியகத்திற்கு பொதுமக்கள் தங்களிடம் உள்ள சுதந்திர போராட்டம் தொடர்பாக அரும்பொ-ருட்களை நன்கொடையாக வழங்கலாம்.சுதந்திர போராட்டத்தில், தமிழகத்தின் தியாகத்தையும் பங்களிப்-பையும் போற்றும் வகையில் சுதந்திர தின அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று முதல்வர், 75-வது சுதந்திர தின விழா உரையில் அறிவித்துள்ளார்.

சென்னை மெரினா கடற்கரை எதிரில், ஹுமாயூன் மஹால் கட்டடத்தில், 80,000 சதுரஅடி பரப்பளவில் பெரிய அளவில் அருங்காட்சியகம் அமைக்கப்படவுள்ளது.பொதுமக்கள் தங்களிடம் உள்ள, சுதந்திரப் போராட்டம் குறித்த பழங்கால ஆவணங்கள், கையெழுத்து பிரதிகள், செய்தி தாள்கள், ஜெயில் வில்லைகள், ராட்டைகள், பட்டயங்கள், ஐ.என்.ஏ., சீரு-டைகள், ஐ.என்.ஏ. அஞ்சல்தலை மற்றும் ரூபாய் நோட்டுகள் போன்ற இனங்களை நன்கொடையாக அளிக்கலாம். தங்கள் வசம் உள்ள அரிய பொருட்களை சென்னை அல்லது, 23 மாவட்ட அருங்காட்சியகங்களுக்கு நேரடியாக சென்று வழங்கலாம். இவ்-வாறு வழங்கப்படும் பொருட்களுக்கு உரிய ஒப்புகைக் கடிதம், பாராட்டு சான்றிதழ் அருங்காட்சியக ஆணையரால் வழங்கப்-படும்.அரியபொருட்கள் பொது மக்கள் பார்வைக்கு வைக்கப்படும்-போது, அதை வழங்கியவர்களின் பெயர்களும் இடம் பெறும். ஆகவே, பொதுமக்கள் தங்களிடம் உள்ள சுதந்திர போராட்டம் தொடர்பான பொருட்களை, அருங்காட்சியகத்திற்கு நன்கொடை-யாக வழங்கலாம். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.






      Dinamalar
      Follow us