/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பிரதமரின் கல்வி உதவித்தொகை திட்டத்தில் பயன்பெற மாணவ, மாணவியருக்கு அழைப்பு
/
பிரதமரின் கல்வி உதவித்தொகை திட்டத்தில் பயன்பெற மாணவ, மாணவியருக்கு அழைப்பு
பிரதமரின் கல்வி உதவித்தொகை திட்டத்தில் பயன்பெற மாணவ, மாணவியருக்கு அழைப்பு
பிரதமரின் கல்வி உதவித்தொகை திட்டத்தில் பயன்பெற மாணவ, மாணவியருக்கு அழைப்பு
ADDED : அக் 14, 2024 06:16 AM
நாமக்கல்: 'பிரதமரின் கல்வி உதவித்தொகை திட்டத்தில் ஸ்காலர்ஷிப் பெற தகுதியான மாணவ, மாணவியர் ஆன்லைன் மூலம் விண்-ணப்பிக்கலாம்' என, நாமக்கல் கலெக்டர் உமா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:இளம் சாதனையாளர்களுக்கான பிரதமரின் கல்வி உதவித்-தொகை திட்டத்தின் கீழ், கல்வி உதவித்தொகை பெற தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் (நேஷனல் ஸ்காலர்ஷிப் போர்ட்டல்) விண்ணப்பிக்கலாம். இதர பிற்படுத்தப்பட்டோர், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், சீர்மரபினர் ஆகிய பிரிவு-களை சேர்ந்த நாடு முழுவதும் உள்ள மாணவர்களுக்கு கல்வி உத-வித்தொகை வழங்கும் வகையில், பிரதமரின் கல்வி உதவித்-தொகை திட்டம், மத்திய அரசால் செயல்படுத்தப்படவுள்ளது. அதன்படி, 2024-25ம் ஆண்டிற்கு தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பள்ளிகளில் பயிலும், தமிழகத்தை சேர்ந்த மாணவர்களுக்கு இக்கல்வி உதவித்தொகை வழங்கப்பட உள்ளது.
இத்திட்டத்தின் கீழ் மாணவ, மாணவியர் விண்ணப்பிக்க கடைசி நாள், வரும், 15. கல்வி நிறுவனங்கள் விண்ணப்பத்தை சரிபார்க்க கடைசி நாள் வரும், 31. இத்திட்டத்தில், நடப்-பாண்டில் புதிதாக விண்ணப்பிக்க விரும்பும், 9 மற்றும் பிளஸ் 1 வகுப்புகளில் பயிலும் மாணவ, மாணவியர், முறையே, 8 மற்றும் பத்தாம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையிலேயே பயனாளிகளாக தேர்வு செய்யப்பட்டு, இக்கல்வி உதவித்தொகை வழங்கப்படும்.
எனவே, 60 சதவீதம் மற்றும் அதற்கும் அதிகமாக மதிப்பெண் பெற்ற, பட்டியலிடப்பட்ட பள்ளிகளில் பயிலும், மாணவ மாண-வியர் தேசிய கல்வி உதவித்தொகை தளத்தில், தங்களது மொபைல் எண் மற்றும் ஆதார் விபரங்களை உள்ளீடு செய்தால், ஓ.டி.ஆர்., நெம்பர் மற்றும் பாஸ்வேர்டு பதிவு செய்யப்பட்ட மொபைல் போனிற்கு வரும். மேற்கண்ட ஓ.டி.ஆர்., நெம்பரை பயன்படுத்தி, 2024--25ம் ஆண்டிற்கான கல்வி உதவித்தொ-கைக்கு, உரிய ஆவணங்களை பதிவேற்றம் செய்து விண்ணப்-பிக்க வேண்டும்.
இத்திட்டம் தொடர்பான கூடுதல் விபரங்களுக்கு, நேஷனல் ஸ்காலர்ஷிப் போர்ட்டல் மற்றும் மத்திய அரசின் சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையின் இணையதளத்திலும், நாமக்கல் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்ப-டடோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அணு-கியும் பெற்றுக்கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.