/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மாணவ, மாணவியருக்கு இட்டு வைப்பு பத்திரம் வழங்கல்
/
மாணவ, மாணவியருக்கு இட்டு வைப்பு பத்திரம் வழங்கல்
ADDED : மார் 12, 2024 04:03 AM
நாமக்கல்: பள்ளி கல்வித்துறை சார்பில், விபத்துகளில் பெற்றோரை இழந்த, 14 மாணவ, மாணவியருக்கு, 10.50 லட்சம் ரூபாய்க்கான இட்டு வைப்பு பத்திரங்கள் வழங்கப்பட்டன. தமிழக அரசு சார்பில், கல்வி உதவித்தொகை, வருவாய் ஈட்டும் தாய், தந்தை விபத்தில் இறந்தாலோ, நிரந்தர முடக்கம் அடைந்தாலோ பாதிக்கப்படுகின்ற மாணவ, மாணவியருக்கு, நிதி உதவி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தில், நாமக்கல் மாவட்டத்தில், விபத்துகளில் தாய் அல்லது தந்தையை இழந்த மற்றும் நிரந்தர முடக்கம் அடைந்த பெற்றோர்களின் குழந்தைகளின் கல்வி மற்றும் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு மாணவ, மாணவியருக்கு இட்டு வைப்பு நிதி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
இத்திட்டத்தின் கீழ், துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளை சேர்ந்த, மொத்தம், 14 மாணவ, மாணவியருக்கு தலா, 75,000 ரூபாய் வீதம், 10.50 லட்சம் ரூபாய்க்கான இட்டு வைப்பு பத்திர ஆணைகளை, கலெக்டர் உமா வழங்கினார்.

