/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
துாய்மை பணியாளர்களுக்கு நலவாரிய அட்டை வழங்கல்
/
துாய்மை பணியாளர்களுக்கு நலவாரிய அட்டை வழங்கல்
ADDED : மே 31, 2025 06:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பள்ளிப்பாளையம்: பள்ளிப்பாளையம் நகராட்சியில் பணிபுரியும், 42 துாய்மை பணியாளர்களுக்கு, 'தாட்கோ' மூலம் நலவாரிய அடையாள அட்டை வழங்கும் விழா மன்ற அரங்கில், நேற்று நடந்தது. நகராட்சி தலைவர் செல்வராஜ், துணைத்தலைவர் பாலமுருகன் ஆகியோர், துாய்மை பணியாளர்களுக்கு அடையாள அட்டை வழங்கினர்.
நிகழ்ச்சியில் கமிஷனர் தயாளன், சுகாதார ஆய்வாளர் பன்னீர்செல்வம் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த நலவாரிய அடையாள அட்டையை பயன்படுத்தி, விபத்து காப்பீடு, கல்வி பயிலும் வாரிசுதாரர்களுக்கு கல்வி உதவித்தொகை மற்றும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை பெறலாம் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.