/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
சாலை நடுவே நின்ற அரசு பஸ் பயணிகள் தள்ளி நிறுத்திய பரிதாபம்
/
சாலை நடுவே நின்ற அரசு பஸ் பயணிகள் தள்ளி நிறுத்திய பரிதாபம்
சாலை நடுவே நின்ற அரசு பஸ் பயணிகள் தள்ளி நிறுத்திய பரிதாபம்
சாலை நடுவே நின்ற அரசு பஸ் பயணிகள் தள்ளி நிறுத்திய பரிதாபம்
ADDED : அக் 18, 2024 03:09 AM
சாலை நடுவே நின்ற அரசு பஸ்
பயணிகள் தள்ளி நிறுத்திய பரிதாபம்
ராசிபுரம், அக்.18-
ராசிபுரம், பழைய பஸ் நிலையத்தில் சாலை நடுவே நின்ற அரசு பஸ்சை பயணிகள், பொதுமக்கள் தள்ளி நிறுத்திய பரிதாபம் ஏற்பட்டது.
ராசிபுரம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து, 30க்கு மேற்பட்ட பயணிகளுடன், அரசு டவுன் பஸ் நேற்று மதியம், 2:00 மணியளவில் சேலத்தை நோக்கி சென்று கொண்டிருந்தது. ராசிபுரம் பழைய பஸ் நிலையம் அருகே வந்தபோது ரவுண்டானா பகுதியில் பஸ்சை டிரைவர் திருப்பினார். ஆனால், பஸ் முழுவதும் திரும்பவில்லை. பஸ்சை பின்னால் நகர்த்த ரிவர்ஸ் கியர் போடும்போது, கியர் இயங்கவில்லை. நீண்ட நேரமாக போராடியும் கியர் இயங்கவில்லை. சாலை நடுவே நின்ற பஸ்சால் பழைய பஸ்நிலையத்தில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதை பார்த்த, அருகில் இருந்த பொதுமக்கள், பயணிகள், கண்டக்டர் ஆகியோர் பஸ்சை பின்னால் தள்ளினர். சிறிது தூரம் மட்டுமே சென்றது. டிரைவர் வண்டியை ஆப்
செய்துவிட்டு மீண்டும் இயக்கினார். அப்போது, ரிவர்ஸ் கியர் வேலை செய்தது. அதன் பிறகு வண்டியை திருப்பி சேலம் புறப்பட்டார். முன்னதாக, 15 நிமிடத்திற்கும் மேலாக பஸ் சாலையில் நின்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பஸ்சில் உட்கார்ந்திருந்த பயணிகள் இறங்கி வேறு பஸ்சில் சேலம் புறப்பட்டனர்.
கடந்த, 2 வாரங்களுக்கு முன் புதுப்பாளையம் பகுதியில் விபத்துக்குள்ளான டவுன் பஸ்சை பொதுமக்கள் தள்ளிதான் நிறுத்தினர். அதேபோல், விபத்துக்குள்ளான பஸ்சுக்கு மாற்றாக வந்த பஸ் சேற்றில் சிக்கியது. அப்போது பொக்லைன் உதவியுடன் பொதுமக்கள் பஸ்சை மீட்டனர். போதிய பராமரிப்பு இல்லாததால், ராசிபுரம் பணிமனை பஸ்கள் இதுபோன்ற பிரச்னை யில் சிக்கி கொள்கின்றன.