UPDATED : அக் 20, 2026 03:46 AM
ADDED : அக் 20, 2026 02:01 AM

நாமக்கல்; நாமக்கல் மாவட்டம் முழுவதும், இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று மாலை, 5:00 மணிக்கு, நாமக்கல், மோகனுார் உள்ளிட்ட இடங்களில் லேசான மற்றும் கனமழை பெய்ய துவங்கியது. அதன் காரணமாக, தாழ்வான பகுதிகளில் மழைநீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது. குறிப்பாக, பரமத்தி சாலை, சேலம் சாலைகளில், மழைநீர் குளம்போல் தேங்கி நின்றது. வாகன ஓட்-டிகள் ஊர்ந்து செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டனர். இந்த மழை, ஒரு மணி நேரம் நீடித்ததால், மக்-களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
மேலும், ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜையை-யொட்டி, பூக்கள் மற்றும் பூஜை பொருட்கள் விற்-பனை சூடுபிடித்திருந்த நிலையில், மழை காரண-மாக வியாபாரம் பாதிக்கப்பட்டது. மோகனுாரில், மாலை, 5:15 மணிக்கு துவங்கிய மழை, அரை மணி நேரம் நீடித்தது.
