/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பிலிக்கல்பாளையத்தில் வெல்லம் விலை சரிவு
/
பிலிக்கல்பாளையத்தில் வெல்லம் விலை சரிவு
ADDED : நவ 24, 2024 03:05 AM
ப.வேலுார்: ப.வேலுார் வட்டாரத்தில் பாண்டமங்கலம், ஜேடர்பாளையம், சோழசிராமணி, அய்யம்பாளையம், கபிலர்மலை, நன்செய் இடையாறு உள்ளிட்ட பகுதிகளில், கரும்பு சாகுபடி அதிகளவில் நடக்கிறது. இவற்றை, கரும்பு ஆலை உரிமையாளர்கள் வாங்கிச்-சென்று, அச்சு வெல்லம், உருண்டை வெல்லம், நாட்டு சர்க்கரை தயாரிக்கின்றனர். வெல்லத்தை, 30 கிலோ கொண்ட சிப்பமாக கட்டி, பிலிக்கல்பாளையத்தில் உள்ள வெல்லம் ஏல மார்க்-கெட்டில், சனி, புதன்கிழமைகளில் விற்பனை செய்கின்றனர்.
நேற்று நடந்த ஏலத்தில், பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகள், வெளிமாநில வியாபாரிகள் அதிகளவில் வரா-ததால், விலை சரிவடைந்தது. கடந்த வாரம், 30 கிலோ கொண்ட உருண்டை வெல்லம் ஒரு சிப்பம், 1,320 ரூபாய், அச்சுவெல்லம், 1,350 -ரூபாய்க்கு விற்பனையானது. இந்த வாரம், உருண்டை வெல்லம், 1,220 ரூபாய், அச்சுவெல்லம், 1,230 ரூபாய்க்கு விற்ப-னையானது.நேற்று நடந்த ஏலத்தில், உருண்டை வெல்லம், 6,000 சிப்பம், அச்சு வெல்லம், 1,700 சிப்பம் ஏலத்திற்கு வந்திருந்தன. மொத்தம், 96 லட்சம் ரூபாய்க்கு வர்த்தகமானது. வெல்லம் விலை சரிவால், கரும்பு பயிரிட்ட விவசாயிகள், வெல்லம் உற்-பத்தி செய்யும் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.