/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
'குழந்தைகள் தனித்திறமையை வெளிப்படுத்த வாய்ப்பாக ஜவகர் சிறுவர் மன்றம் திகழும்'
/
'குழந்தைகள் தனித்திறமையை வெளிப்படுத்த வாய்ப்பாக ஜவகர் சிறுவர் மன்றம் திகழும்'
'குழந்தைகள் தனித்திறமையை வெளிப்படுத்த வாய்ப்பாக ஜவகர் சிறுவர் மன்றம் திகழும்'
'குழந்தைகள் தனித்திறமையை வெளிப்படுத்த வாய்ப்பாக ஜவகர் சிறுவர் மன்றம் திகழும்'
ADDED : அக் 21, 2024 07:27 AM
நாமக்கல்: தமிழக அரசு கலை பண்பாட்டுத்துறையின் கீழ், நாமக்கல் மாவட்டத்தில், நாமக்கல் கோட்டை நகரவை உயர்நிலைப்பள்ளி, கொல்லிமலை செம்மேடு அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில், ஜவகர் சிறுவர் மன்றம் செயல்பட்டு வருகிறது. இங்கு, வாரந்தோறும், சனி, ஞாயிற்று கிழமைகளில், 16 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு, கராத்தே, யோகா, சிலம்பம், பரதநாட்டியம், ஓவியம், கிராமிய கலை போன்ற நுண்கலைகள் இலவசமாக பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. ஜவகர் சிறுவர் மன்ற செயல்பாடுகளை, கலை பண்பாட்டுத் துறை இயக்குனர் காந்தி, ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து அவர் பேசுகையில், ''குழந்தைகள் விடுமுறை நாட்களில் ஜவகர் சிறுவர் மன்றத்திற்கு பெற்றோர் அனுப்பி வைத்து, ஆக்கப்பூர்வமான திறமைகளை வளர்த்துக்கொள்ள வழிவகை செய்ய வேண்டும். குழந்தைகள் மன ஒருமைப்பாடு, தனித்திறமை வெளிப்பட வாய்ப்பாக ஜவகர் சிறுவர் மன்றம் திகழும். ஜவகர் சிறுவர் மன்றத்தில் பங்கேற்று பரிசு மற்றும் பாராட்டு பெறும் குழந்தைகள், வரும் காலத்தில் சிறந்த ஆளுமை உள்ளவர்களாக திகழ்வர்,'' என்றார்.
மாவட்ட அளவில் முதலிடம், மாநில அளவில் இரண்டாம் இடம் பெற்ற மாணவி ஆல்டியாவுக்கு பரிசு வழங்கப்பட்டது. டில்லி தேசிய பாலபவனில் நடக்கும் குழந்தைகள் தினவிழா முகாமிற்கு செல்லும், ஜவகர் சிறுவர் மன்ற மாணவர்கள் முகேஸ்குமார், முகேஸ், ஸ்ரீசாய் உமாராஜ், ரித்தீஸ், பாதுகாவலராக செல்லும் ஓவிய ஆசிரியர் வெங்கடேஷ் ஆகியோரை துறை இயக்குனர் காந்தி வாழ்த்தினார்.
திட்ட அலுவலர் தில்லை சிவக்குமார், கிராமிய நடன ஆசிரியர் பாண்டியராஜன், பரதநாட்டிய ஆசிரியர் தேவயானி, தற்காப்பு கலை ஆசிரியர் ராமச்சந்திரன், சரவணன், ஓவிய ஆசிரியர் விஜயகுமார், வெங்கடேஷ் உள்பட பலர் பங்கேற்றனர்.

