/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ஜார்கண்ட் தொழிலாளர்களுக்கு பணம், மொபைல் கொடுத்து சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பு
/
ஜார்கண்ட் தொழிலாளர்களுக்கு பணம், மொபைல் கொடுத்து சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பு
ஜார்கண்ட் தொழிலாளர்களுக்கு பணம், மொபைல் கொடுத்து சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பு
ஜார்கண்ட் தொழிலாளர்களுக்கு பணம், மொபைல் கொடுத்து சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பு
ADDED : ஜூலை 25, 2025 01:31 AM
பள்ளிப்பாளையம் கடத்தல் கும்பலிடம் பாதிக்கப்பட்ட ஜார்கண்ட் தொழிலாளர்களை, வெப்படை போலீசார் அனுப்பி வைத்தனர்.ஜார்கண்ட் மாநிலம், தஸ்தாரா சமன்பூர் கிராமத்தை சேர்ந்த இர்பான் அன்சாரி, 20, ஜாகீர் அன்சாரி 18, அர்பாஜ் அன்சாரி, 18, இர்சாத் அன்சாரி, 18, கிஷ்மத் அன்சாரி, 30, உல்பத் அன்சாரி, 20, ஆகிய ஆறு பேரும் வேலை தேடி சேலத்துக்கு ரயிலில் கடந்த 21ம் தேதி வந்துள்ளனர். ரயில் நிலையத்தில் இருந்த இவர்களிடம், ஒருவர் வந்து பள்ளிப்பாளையம் அருகே வெப்படையில் உள்ள நுாற்பாலையில் வேலை உள்ளது. தங்குமிடம் கொடுத்து, மூன்று வேளை உணவுடன், 8 மணி நேரம் வேலை, மாதம் ரூ.25 ஆயிரம் சம்பளம் என தெரிவித்துள்ளார். இதை நம்பிய ஆறு பேரும், இவருடன் இரண்டு காரில், வெப்படை உப்புபாளையம் நவக்காடு பகுதியில் வந்துள்ளனர். அங்கு உள்ள ஒரு வீட்டில் ஆறு பேரும் அடைத்து வைக்கப்பட்டனர்.
இவர்களின் குடும்பத்தினருடன் மொபைல்போனில் பேச வைத்து, 1.25 லட்சம் ரூபாய் ஆன்லைன் அக்கவுன்ட்டில் போட வைத்துள்ளார். பின்னர் அவர்களிடம் உள்ள மொபைல், ஏ.டி.எம்., கார்டு, பின் நம்பர் ஆகியவற்றை கேட்டு பறித்துக்கொண்டு, ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் இறங்கி விட்டு சென்றுள்ளார்.
இது குறித்து போலீசில், ஜார்கண்ட் தொழிலாளர்கள் புகார் கொடுத்தனர். வெப்படை போலீசார் விசாரித்து ஏழு பேரை கைது செய்தனர்.கடத்தல் கும்பலிடம் இருந்து மீட்கப்பட்ட பணம், மொபைல் போன் குமாரபாளையம் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டது. பின் நீதிமன்ற உத்தரவின்படி, பணம், மொபைல் போன் ஆகியவற்றை ஜார்கண்ட் தொழிலாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து, நேற்று வெப்படை போலீசார், அவர்களை ஈரோடு ரயில் நிலையத்தில் இருந்து சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர்.

