/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ஆம்புலன்சில் டிரைவர், மருத்துவ உதவியாளர் பணிக்கான வேலை வாய்ப்பு: 26 பேர் தேர்வு

ADDED : செப் 07, 2025 12:47 AM
நாமக்கல், நாமக்கல்லில் நடந்த, '108' அவசரகால ஆம்புலன்ஸ் சேவையில், டிரைவர், மருத்துவ உதவியாளர் பணியிடங்களுக்கான நேரடி வேலை வாய்ப்பு முகாமில், 26 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.
தமிழகத்தில் உள்ள, 108, 102, 155377 ஆம்புலன்ஸ் வாகனங்களில், டிரைவர், மருத்துவ உதவியாளர் பணிகளுக்கான வேலைவாய்ப்பு முகாம், நாமக்கல்-மோகனுார் சாலையில் உள்ள, பழைய அரசு மருத்துவமனை வளாகத்தில் அமைந்துள்ள, '108' அவசரகால ஆம்புலன்ஸ் சேவை அலுவலகத்தில் நடந்தது. ஆண்கள் மற்றும் பெண்கள் உட்பட மொத்தம், 50 பேர் நேர்முக தேர்வில் கலந்துகொண்டனர். அதில், டிரைவர் பணிக்காக, 13 பேர், மருத்துவ உதவியாளர் பணிக்கு, 13 பேரும் என மொத்தம், 26 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.
டிரைவர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு, 10 நாட்கள் முழுமையான வகுப்பறை பயிற்சி அளிக்கப்பட்டு பணி வழங்கப்படும். மருத்துவ உதவியாளர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு, 50 நாட்கள் முழுமையான வகுப்பறை பயிற்சி அளிக்கப்பட்டு, பணியில் அமர்த்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முகாமை, சேலம் மண்டல மேலாளர் ஜெயக்குமார், சேலம் மாவட்ட மேலாளர் அறிவுக்கரசு, ஒருங்கிணைப்பாளர் மனோஜ், நாமக்கல் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சின்னமணி மற்றும் சேலம் மண்டல வாகன பராமரிப்பு மேலாளர் மணிராஜ் ஆகியோர் நடத்தினர்.