/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
காவிரி ஆறு உயர் மட்ட பாலத்தில் எரிந்த மின் விளக்குகளால் மகிழ்ச்சி
/
காவிரி ஆறு உயர் மட்ட பாலத்தில் எரிந்த மின் விளக்குகளால் மகிழ்ச்சி
காவிரி ஆறு உயர் மட்ட பாலத்தில் எரிந்த மின் விளக்குகளால் மகிழ்ச்சி
காவிரி ஆறு உயர் மட்ட பாலத்தில் எரிந்த மின் விளக்குகளால் மகிழ்ச்சி
ADDED : ஏப் 25, 2025 01:58 AM
பள்ளிப்பாளையம்:
பள்ளிப்பாளையம், காவிரி ஆற்றின் குறுக்கே உள்ள உயர்மட்ட பாலத்தில், 10 நாட்களுக்கு பிறகு மின் விளக்குகள் எரிந்ததால், வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
நாமக்கல் - ஈரோடு மாவட்டத்தை இணைக்கும் வகையில், பள்ளிப்பாளையம் காவிரி ஆற்றின் குறுக்கே உயர்மட்டம் பாலம் உள்ளது. சேலம், நாமக்கல், ராசிபுரம், திருச்செங்கோடு உள்ளிட்ட பகுதியில் இருந்து ஈரோட்டுக்கு செல்லும் வாகனங்கள், இந்த பாலத்தின் வழியாக செல்ல வேண்டும்.
பாலத்தின் இருபுறத்திலும் மின் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் கடந்த, 10 நாட்களுக்கு மேலாக விளக்குகள் எரியவில்லை. இதனால் பாலம் கும்மிருட்டாக காணப்பட்டது. இது குறித்து நமது நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதையடுத்து மின் விளக்கு சீரமைப்பு பணி நடந்தது. பணிகள் முழுமையாக முடிந்து, நேற்று இரவு முதல் மீண்டும் பாலத்தில் மின் விளக்குகள் எரிந்தன. இதனால் கும்மிருட்டாக காணப்பட்ட பாலம், பகல் போல வெளிச்சத்தில் காணப்பட்டதால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.