/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
போலீஸ் ஜீப் டிரைவரிடம் நீதிபதி விசாரணை
/
போலீஸ் ஜீப் டிரைவரிடம் நீதிபதி விசாரணை
ADDED : அக் 02, 2024 07:20 AM
பள்ளிப்பாளையம்: வெப்படையில் ஏ.டி.எம்., கொள்ளையர்களை சுட்டுப்பிடித்த, குமாரபாளையம் இன்ஸ்பெக்டர் தவமணியின், 'ஜீப்' டிரைவ-ரிடம் நீதிபதி விசாரணை நடத்தினார்.
கேரளா மாநிலத்தில், கடந்த, 27ல், 3 ஏ.டி.எம்., மையங்களில், 66 லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்து, கன்டெய்னர் லாரியில் கொள்ளையர்கள் தப்ப முயன்றனர். அவர்களை, பள்ளிப்-பாளையம் அருகே, வெப்படை அடுத்த செட்டியார்கடை பகு-தியில், குமாரபாளையம் இன்ஸ்பெக்டர் தவமணி, எஸ்.ஐ., ரஞ்சித் ஆகியோர் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர். இந்த துப்-பாக்கி சூட்டில் கொள்ளையன் ஜூமாந்தின், 37, சம்பவ இடத்தி-லேயே பலியானார். கன்டெய்னர் லாரியில் இருந்த, 5 பேரை கைது செய்து, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், குமாரபாளையம் இன்ஸ்பெக்டர் தவமணியின், 'ஜீப்' டிரைவர் மதியழகனிடம், குமாரபாளையம் குற்றவியல் நீதி-மன்ற நடுவர் நீதிபதி மாலதி, நேற்று விசாரணை நடத்தினார்.