/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கைலாஷ் ஸ்கூல் ஆப் எக்ஸலன்ஸ் பள்ளி மாணவர்கள் கல்வி சுற்றுலா
/
கைலாஷ் ஸ்கூல் ஆப் எக்ஸலன்ஸ் பள்ளி மாணவர்கள் கல்வி சுற்றுலா
கைலாஷ் ஸ்கூல் ஆப் எக்ஸலன்ஸ் பள்ளி மாணவர்கள் கல்வி சுற்றுலா
கைலாஷ் ஸ்கூல் ஆப் எக்ஸலன்ஸ் பள்ளி மாணவர்கள் கல்வி சுற்றுலா
ADDED : ஜன 13, 2024 04:15 AM
நாமக்கல்: நாமக்கல் கைலாஷ் ஸ்கூல் ஆப் எக்ஸலன்ஸ் சி.பி.எஸ்.இ., பள்ளி மாணவர்கள், திருநெல்வேலி மாவட்டம், மகேந்திரகிரியில் அமைந்துள்ள இஸ்ரோவிற்கு, ஒருநாள் கல்வி சுற்றுலா சென்றனர்.அங்கு, பி.எஸ்.எல்.வி.,- ஜி.எஸ்.எல்.வி., கிரையோஜெனிக் என்ஜின் தொழில்நுட்பம், செயற்கைக்கோள் ஏவப்படும் விதம், அவற்றின் வகை, பயன்கள் குறித்து, மாணவர்கள், இஸ்ரோ விஞ்ஞானிகளிடம் கேட்டறிந்தனர்.மேலும், சந்திரயான்-௩ குறித்து கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் சரியான பதில்களை கூறி, இஸ்ரோ விஞ்ஞானிகளின் பாராட்டு, பரிசுகளை பெற்று, பள்ளிக்கு பெருமை சேர்த்தனர்.மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக, பள்ளி துணை முதல்வர், ஆசியர்கள் பங்கேற்றனர்.