/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கலாசி சுமைப்பணி தொழிலாளர் கூட்டம்
/
கலாசி சுமைப்பணி தொழிலாளர் கூட்டம்
ADDED : ஜூலை 22, 2025 01:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருச்செங்கோடு, இ.கம்யூ., கட்சியின் கலாசி சுமைப்பணி அரங்க கிளை மாநாடு, திருச்செங்கோடு நகர இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் நடந்தது. இதில் புதிய நிர்வாகிகளாக செயலாளர் ராஜவேல், துணை செயலாளர் சந்திரன், பொருளாளர் அய்யாவு
ஆகியோர் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர். சேலத்தில் ஆக., 18ல் நடைபெற உள்ள மாநில மாநாட்டில் திரளாக கலந்துகொள்வது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர்கள் சுகுமார், ஜெயராமன் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.