/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
'காலைக்கதிர்' அரிச்சுவடி ஆரம்பம் கோலாகலம் பிஞ்சு விரல்களில் 'அ'னா... 'ஆ'வன்னா... எழுதிய மழலையர்
/
'காலைக்கதிர்' அரிச்சுவடி ஆரம்பம் கோலாகலம் பிஞ்சு விரல்களில் 'அ'னா... 'ஆ'வன்னா... எழுதிய மழலையர்
'காலைக்கதிர்' அரிச்சுவடி ஆரம்பம் கோலாகலம் பிஞ்சு விரல்களில் 'அ'னா... 'ஆ'வன்னா... எழுதிய மழலையர்
'காலைக்கதிர்' அரிச்சுவடி ஆரம்பம் கோலாகலம் பிஞ்சு விரல்களில் 'அ'னா... 'ஆ'வன்னா... எழுதிய மழலையர்
ADDED : அக் 13, 2024 08:43 AM
நாமக்கல்: 'காலைக்கதிர்' நடத்திய, 'அரிச்சுவடி ஆரம்பம்' நிகழ்ச்சியில் ஏராள-மான மழலையரின் பிஞ்சு விரல்களை பிடித்த பிரபலங்கள், அவர்-களை கல்வி கோவிலுக்குள் அடியெடுக்க வைத்தது நெகிழ்ச்சி-யாக அமைந்தது.
நவராத்திரி நிறைவில் வரும் விஜய தசமியன்று தொடங்கப்படும் கல்வி, கலை உள்ளிட்ட
அனைத்தும் வெற்றியடையும் என்பது மக்களின் நம்பிக்கை. இந்த நன்னாளில் பெற்றோர்,
குழந்தை-களை பள்ளியில் சேர்ப்பதும், கல்வி கற்க தொடக்கமாக, 'அ', 'ஆ' எழுத வைப்பதும் வழக்கம்.அதனால், 'காலைக்கதிர்' மற்றும் அதன் மாணவர் படைப்பான, 'பட்டம்' இதழ், ராசிபுரம், ராசி
இன்டர்நேஷனல் பள்ளி இணைந்து, மழலையரின் பிஞ்சு விரல் பிடித்து, கல்வி கோவி-லுக்குள்
அடியெடுத்து வைக்கும், 'அரிச்சுவடி ஆரம்பம்' நிகழ்ச்-சியை, நேற்று நடத்தின.ராசிபுரம், ராசி இன்டர்நேஷனல் பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில், பள்ளி தாளாளர் சத்தியமூர்த்தி,
நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதல்வர் செல்வ ராஜ், நாமக்கல்
அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை முதல்வர் சாந்தா அருள்மொழி, நாமக்கல் மாவட்ட கல்வி அலுவலர்
(தனியார் பள்ளிகள்) ஜோதி, ஆகியோர் குத்துவிளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்தனர்.சரஸ்வதி பூஜையை தொடர்ந்து, குழந்தைகளின் விரல் பிடித்து, 'அ', 'ஆ' எழுத வைத்து, அரிச்சுவடியை
தொடங்கி வைத்தனர். 100க்கும் மேற்பட்ட பெற்றோர், பிரபலங்களின் கைகளால் குழந்-தைகளின்
வித்யாரம்பத்தை நெகிழ்ச்சியுடன் கண்டுகளித்தனர். அனைத்து குழந்தைகளுக்கும், பென்சில்
பாக்ஸ், சிலேட், பென்சில், ரப்பர், ஷார்ப்னர், கிரையான்ஸ், கலரிங் புக் அடங்கிய, 1,000 ரூபாய் மதிப்புள்ள
'ஸ்கூல் பேக்' அன்பளிப்பாக வழங்கப்-பட்டது. பெற்றோர் பின்னணியில் நிற்க, மழலையர் எழுத
தொடங்கிய காட்சியை பதிவு செய்து, புகைப்படத்துடன் கூடிய, 'காலைக்கதிர்' சான்றிதழ்கள்
வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் பள்ளி பொருளாளர் மாதேஸ்வரி, காலைக்கதிர் மண்டல பொது மேலாளர்
(வர்த்தகம்) பாலாஜி ஆகியோர் பங்கேற்றனர்.இதேபோல் சேலம், வாகீஸ்வரி வித்யாலயா சீனியர் செகண்டரி பள்ளி, இடைப்பாடி யுனிவர்சல்
பப்ளிக் பள்ளியிலும் அரிச்சுவடி ஆரம்பம் நிகழ்ச்சி நடந்தது.நன்றிசேலம், இடைப்பாடி, ராசிபுரம் ஆகிய இடங்களில் நடந்த, 'அரிச்-சுவடி ஆரம்பம்' நிகழ்ச்சிகளில்
பங்கேற்ற பெற்றோர், மழலைய-ருக்கு, 'அ'னா, 'ஆ'வன்னா எழுத வைத்த பிரபலங்கள், இணைந்து
நடத்திய சேலம் வாகீஸ்வரி வித்யாலயா சீனியர் செகண்டரி பள்ளி, ராசிபுரம், ராசி
இன்டர்நேஷனல் பள்ளி, இடைப்பாடி யுனிவர்சல் பப்ளிக் பள்ளி, நிகழ்ச்சி நடத்த உதவிய
அனைவருக்கும் காலைக்கதிர் சார்பில் நன்றி.
'மகிழ்ச்சியான துவக்கம்'நான் எதிர்பார்த்து வந்ததை விட நிகழ்ச்சி அருமையாக இருந்தது. என் குழந்தையும் நிகழ்ச்சியை
ரசித்து கவனித்தான். பிரபலங்கள் அனைவரும், 'குழந்தை நன்றாக படிக்க வேண்டும்' என,
ஆசீர்வ-தித்தனர். மகிழ்ச்சியான துவக்கம் என, நினைத்து மனது நிறை-வாக உள்ளது. மாணவனுக்கு
பரிசு கொடுத்து அனுப்பியது இன்னும் சிறப்பு.- எம்.முகமது இசாத்,ராசிபுரம்.
'காலைக்கதிர்' நாளிதழுக்கு நன்றிசரஸ்வதி பூஜையில் கல்வியை துவக்கும் குழந்தைகளுக்கு நிச்சய-மாக கடவுளின் அருள்
கிடைக்கும் என, நம்புகிறோம். சிறந்த கல்-வியாளர்கள், குழந்தையின் கையை பிடித்து வித்யாரம்பம்
செய்த இந்த நாளை என்னால் மறக்க முடியாது. பதிவு செய்து கையோடு புகைப் படமாக கொடுத்த,
'காலைக்கதிர்' நாளிதழுக்கு நன்றி.- எஸ்.சிவரஞ்சனி,ஆண்டகலுார்கேட்.
'ஒரு வாரமாக காத்திருந்தோம்'இன்றைய நாளுக்காக ஒரு வாரமாக காத்திருந்தோம். எழுந்த-வுடன் குளித்து விட்டு நிகழ்ச்சிக்கு
தயாராகி விட்டோம். எங்களு-டைய குழந்தையின் கல்வியை இன்று இனிதே துவங்கி-யுள்ளோம்.
எங்களை போன்றவர்களுக்கு இதுபோன்ற நிகழ்ச்-சியை ஏற்படுத்தி கொடுத்த, 'காலைக்கதிர்'
நாளிதழை மறக்க முடி-யாது. -- ஸ்ரீதேவி யோகேஸ்,திருச்செங்கோடு.
'எதிலும் நேர்த்தி இருக்கும்...''காலைக்கதிர்' நாளிதழின் வாசகன் நான். இவர்கள் எதை செய்-தாலும் அதில் நேர்த்தி இருக்கும்.
அதேபோல், இந்த நிகழ்ச்சி-யையும் நேர்த்தியாக செய்திருந்தனர். எனது மகனின் கல்வியை சிறந்த
கல்வியாளர்கள் மூலம் தொடங்கி வைத்ததற்கு நன்றி. புகைப்படம், ஸ்கூல் பேக், எழுது பொருட்கள்
என அசத்தி விட்-டனர். காலைக்கதிருக்கு சல்யூட்.- ஜி.பழனிசாமி,ராசிபுரம்.
'சமுதாய நோக்கோடுவாழ வேண்டும்''காலைக்கதிர்' நாளிதழ் மற்றும் ராசி இன்டர்நேஷனல் பள்ளி நடத்திய, 'அரிச்சுவடி ஆரம்பம்' என்ற
வித்யாரம்பம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதில் பெருமிதம் அடைகிறேன். எழுத்தறிவித்-தவன்
இறைவனாவான். 'இன்று வித்யாரம்பம் செய்து கொண்ட அனைத்து குழந்தைகளும் படித்து, அவர்கள்
வாழ்வில் நாட்-டிற்கும், வீட்டிற்கும் பயன்படும் வகையில் கல்வியை பெற்று, சமுதாய நோக்கோடு
வாழ்வதற்காக வாழ்த்துகிறேன்.- எம்.செல்வராஜ்,முதல்வர், நாமக்கல் கால்நடை மருத்துவ கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்.'குழந்தைகள் படிக்கஊக்குவிப்பு'இந்த நிகழ்ச்சி எனக்கு புது அனுபவம். மழலையர்களை எழுத வைத்து பார்த்தது, இதுதான் முதல்
முறை. குழந்தைகளின் பெற்றோர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். வருங்காலத்தில் குழந்-தைகள்
நன்றாக வளர ஊக்குவிப்பாக இருக்கும். மேலும், பள்ளி முடித்த மற்றும் மேல்படிப்பு படிக்க போகும்
மாணவர்களுக்கு, 'காலைக்கதிர்' நடத்தும் விழிப்புணர்வு நிகழ்ச்சி வரவேற்கத்தக்க ஒன்று.-கி.சாந்தா அருள்மொழி, முதல்வர், நாமக்கல் அரசு மருத்துவகல்லுாரி மருத்துவமனை.'எதிர்காலத்தில்பிரகாச வாழ்க்கை'இந்த, 'அரிச்சுவடி ஆரம்பம்' நிகழ்ச்சியில், பெற்றோர்களின் அரவ-ணைப்பு பார்ப்பதற்கு
உணர்வுப்பூர்வமாக இருந்தது. குழந்தை-களும் ஆர்வமாக பங்கேற்றனர். 'காலைக்கதிர்' நாளிதழும்,
கல்வி நிறுவனத்தினர் ஒருங்கிணைப்பு செய்து சிறப்பாக நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தனர்.
குழந்தைகளுக்கு எதிர்காலத்தில் பிரகாச வாழ்வை வழங்கும் கல்வி அறிவை நிறைவாக பெற, இந்த
விஜ-யதசமி நாளில் எண்ணும் எழுத்தும் கற்றுக்கொள்ள தொடங்கி-யது சிறப்பு.- எம்.ஜோதி,நாமக்கல் மாவட்ட கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள்).'கல்வி ஒன்றேஅழியாத செல்வம்'கல்வி ஒன்றே அழியாத செல்வம். இந்த நாளில் கல்வியை தொடங்கும் அனைத்து குழந்தைகளுக்கும்
மிக சிறந்த எதிர்காலம் இருக்கிறது. அரிச்சுவடி ஆரம்பம் நிகழ்ச்சி மூலம் பள்ளிக்கு அடி எடுத்து
வைக்கும் குழந்தைகள் அனைவரும் மென்மேலும் வளர எல்லாம் வல்ல பெருமாளை
பிரார்த்திக்கிறேன்.-எஸ்.சத்தியமூர்த்தி,தாளாளர், ராசி இன்டர்நேஷனல் பள்ளி, ராசிபுரம்.