sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

குப்பைக்கு தீ வைத்தால் போலீசில் புகார் களியனுார் பஞ்., நிர்வாகம் அறிவிப்பு

/

குப்பைக்கு தீ வைத்தால் போலீசில் புகார் களியனுார் பஞ்., நிர்வாகம் அறிவிப்பு

குப்பைக்கு தீ வைத்தால் போலீசில் புகார் களியனுார் பஞ்., நிர்வாகம் அறிவிப்பு

குப்பைக்கு தீ வைத்தால் போலீசில் புகார் களியனுார் பஞ்., நிர்வாகம் அறிவிப்பு


ADDED : அக் 06, 2025 04:16 AM

Google News

ADDED : அக் 06, 2025 04:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பள்ளிப்பாளையம்: 'ஆவத்திபாளையம் பகுதி ஆற்றங்கரையில் கொட்டப்படும் குப்பை, கழிவுகளுக்கு தீ வைத்தால், போலீசில் புகாரளிக்கப்-படும்' என,

களியனுார் பஞ்., நிர்வாகம் அறிவித்துள்ளது.

பள்ளிப்பாளையம் அருகே, களியனுார் பஞ்.,க்குட்பட்ட ஆவத்தி

பாளையம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் சேகரிக்கும் குப்பை, கழிவுகளை, துாய்மை பணியாளர்கள், ஆவத்திபா-ளையம் பகுதி ஆற்றங்கரையோரம் கொட்டுகின்றனர்.

மேலும், சமயசங்கிலி உள்ளிட்ட பல பகுதிகளிலும் இருந்தம் குப்பை, கழிவுகள் இந்த ஆற்றோரத்தில் கொட்டுகின்றனர்.

இது தவிர தொழிற்சாலை கழிவுகளும், இரவில் வாகனத்தில் கொண்டு வந்து இங்கு கொட்டுகின்றனர். அவ்வாறு கொட்ட-படும் குப்பை, கழிவுகள் மற்றும் தொழிற்சாலை கழிவுகள் அதிக-ளவில் சேர்ந்தவுடன் தீ வைத்துவிடுகின்றனர்.

இதனால், புகை மண்டலமாக மாறி, அருகில் உள்ள குடியிருப்-புக்கு புகை செல்வதால், அங்கு வசிக்கும் மக்கள் பாதிக்கப்படு-கின்றனர்.

மேலும், புகையால் சுற்றுச்சூழல் பாதிப்பும் ஏற்படுகிறது. எனவே, ஆற்றோரத்தில் கொட்டப்படும் குப்பை, கழிவுகளுக்கு தீ வைத்தால் சமபந்தப்பட்டவர்கள் மீது போலீசில் புகாரளிக்கப்-படும் அதனால், யார் தீ வைத்தாலும், பொதுமக்கள் தகவல் தர வேண்டும் என, களியனுார் பஞ்., நிர்வாகம் தெரிவித்துள்ளது.






      Dinamalar
      Follow us