/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பொது கழிப்பறை சேதம் திறந்த வெளியில் 'சிரமம்'
/
பொது கழிப்பறை சேதம் திறந்த வெளியில் 'சிரமம்'
ADDED : அக் 06, 2025 04:15 AM
வெண்ணந்துார்: வெண்ணந்துார் யூனியன், கட்டனாச்சம்பட்டி பஞ்., 9 வார்டு-களில், 4,000க்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர். இந்நி-லையில், அண்ணா நகர், 1-வது வார்டு நுாறு வீடுகளை கொண்-டுள்ளது.
இந்த வார்டில் பொது கழிப்பறை, சில ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டு பயன்பாட்டில் இருந்து வந்தது. இங்கு வசிக்கும் நுாற்றுக்கணக்கான பெண்கள் பொதுக்கழிப்பி-டத்தை பயன்படுத்தி வந்தனர். காலப்போக்கில் பொதுக்கழிப்பி-டத்தை பராமரிக்காததால் பொதுக்கழிப்பிடம் பகுதியை சுற்றிலும் புதர் மண்டியும், கழிப்பிடத்தின் உள் பகுதியில் மரம் முளைத்தும் பயன்பாடின்றி உள்ளது.
இதனால், கட்டனாச்சம்பட்டி, 1-வது வார்டு அண்ணா நகர் பகு-தியை சேர்ந்த பெண்கள் திறந்தவெளி பகுதியை கழிப்பறையாக பயன்படுத்தும் அவலம் நடக்கிறது. இதனால் சொல்ல முடியாத சிரமத்தில் உள்ளனர்.