நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பள்ளிப்பாளையம்: பள்ளிப்பாளையம் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் இருந்து, ஆலாம்-பாளையம் செல்லும் பிரதான வழித்தடத்தில், ஆர்.எஸ்., சாலை பிரிகிறது. இந்த ஆர்.எஸ்., சாலை துவங்கும் இடத்தில், நெடுஞ்-சாலை சார்பில் சாலையின் குறுக்கே பள்ளம் தோண்டப்பட்டு வடிகால் அமைக்கும் பணி, கடந்த, 10 நாட்களாக நடந்து வருகி-றது. இதனால், வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்-ளது. இந்த சாலையில் சென்ற வாகனங்கள் கீழ்காலனி வழியாக சுற்றிக்கொண்டு செல்கின்றன.
ஆர்.எஸ்., வழித்தடத்தில் காவிரி, வசந்த நகர், புதுப்பா-ளையம், பெரியகாடு, ராஜாஜி நகர் உள்ளிட்ட பகுதி மக்களுக்கு, பஸ் வசதி இல்லாததால் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே வடிகால் பணியை விரைந்து முடிக்க வேண்டுகோள் விடுத்துள்-ளனர்.

