ADDED : ஜூலை 16, 2025 01:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராசிபுரம், ராசிபுரம் அடுத்த சிங்களாந்தபுரத்தில், காங்., கமிட்டி சார்பில் காமராஜரின், 123 வது பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. நாமக்கல் கிழக்கு மாவட்ட பொதுச்செயலாளர் மயில்சாமி தலைமையில் நடந்த நிகழ்ச்சியில், இளைஞர் காங்., மாநில செயலாளர் அருளானந்தம் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.
காமராஜர் உருவ சிலைக்கு நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து, பள்ளி மாணவ, மாணவியருக்கு நோட்டு, பேனா, இனிப்புகள் வழங்கினர். பிறந்தநாள் விழாவில், சேந்தமங்கலம் சட்டசபை தொகுதி இளைஞர் காங்., தலைவர் மாரீஸ்வரன், வேலு, பெரியசாமி, சுப்பிரமணியம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.