/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கருணாநிதி உருவச்சிலை - புதிய பஸ் ஸ்டாண்ட் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார்
/
கருணாநிதி உருவச்சிலை - புதிய பஸ் ஸ்டாண்ட் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார்
கருணாநிதி உருவச்சிலை - புதிய பஸ் ஸ்டாண்ட் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார்
கருணாநிதி உருவச்சிலை - புதிய பஸ் ஸ்டாண்ட் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார்
ADDED : அக் 22, 2024 01:02 AM
கருணாநிதி உருவச்சிலை - புதிய பஸ் ஸ்டாண்ட்
முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார்
நாமக்கல், அக். 22-
'தமிழக முதல்வர் ஸ்டாலின், இன்று நாமக்கல் மாவட்டத்தில், 810.28 கோடி ரூபாய் மதிப்பில் புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்து, பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார்' என, கலெக்டர் உமா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழக முதல்வர் ஸ்டாலின், இன்று நாமக்கல் மாவட்டத்திற்கு வருகை தருகிறார். முன்னதாக, சென்னையில் இருந்து விமானத்தில் புறப்பட்டு, காலை, 11:30 மணிக்கு சேலம் விமான நிலையம் வந்தடைகிறார். அங்கிருந்து சாலை மார்க்கமாக காரில் புறப்பட்டு, நாமக்கல் மாவட்டத்திற்கு வருகை தருகிறார். தொடர்ந்து, மதியம், 12:30 மணிக்கு, நாமக்கல் மாநகராட்சி, பரமத்தி சாலையில் உள்ள செலம்ப கவுண்டர் பூங்காவில், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உருவச்சிலையை திறந்து வைக்கிறார்.
தொடர்ந்து, நாமக்கல் - சேலம் புற
வழிச்சாலை, பொம்மைக்குட்டைமேட்டில் நடக்கும் அரசு விழாவில், பல்வேறு அரசு துறைகள் சார்பில், 810.28 கோடி ரூபாய் மதிப்பில், நாமக்கல் மாவட்டத்தில்
முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்து, பல்வேறு புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார். மேலும், 16,000 பயனாளிகளுக்கு, அரசு நலத்திட்ட உதவிகளையும் வழங்கி பேசுகிறார்.
விழாவில், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு, பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் வேலு, ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன், அரசு தலைமை செயலாளர், எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு உயர் அலுவலர்கள் உள்பட பலர் கலந்துகொள்கின்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.