/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மாணவிக்கு பாலியல் தொல்லை; கொல்லிமலை எஸ்.எஸ்.ஐ., கைது
/
மாணவிக்கு பாலியல் தொல்லை; கொல்லிமலை எஸ்.எஸ்.ஐ., கைது
மாணவிக்கு பாலியல் தொல்லை; கொல்லிமலை எஸ்.எஸ்.ஐ., கைது
மாணவிக்கு பாலியல் தொல்லை; கொல்லிமலை எஸ்.எஸ்.ஐ., கைது
ADDED : ஆக 13, 2025 01:54 AM

நாமக்கல்; கல்லுாரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கொல்லிமலை எஸ்.எஸ்.ஐ.,யை போலீசார் கைது செய்தனர்.
நாமக்கல் மாவட்டம், நாமகிரிப்பேட்டை அடுத்த ஆயில்பட்டியை சேர்ந்தவர் மோகன், 54, கொல்லிமலை, வாழவந்திநாடு போலீஸ் ஸ்டேஷனில் எஸ்.எஸ்.ஐ.,யாக பணியாற்றி வந்தார்.
இவர், நாமக்கல் - பரமத்தி சாலையில் உள்ள காவலர் குடியிருப்பில் குடும்பத்துடன் வசிக்கிறார்.
கொல்லிமலையில் உள்ள போலீசாருக்கு, அப்பகுதியை சேர்ந்த ஒருவர் சமையல் செய்து கொடுக்கிறார். சமையலரின், 19 வயது மகள், திண்டுக்கல்லில் உள்ள தனியார் கல்லுாரியில், இரண்டாமாண்டு பி.எஸ்சி., படிக்கிறார்.
இந்நிலையில், கடந்த, 6ல், திண்டுக்கல் செல்வதற்காக புறப்பட்ட கல்லுாரி மாணவி மற்றும் அவரது தந்தை இருவரையும், எஸ்.எஸ்.ஐ., மோகன், தன் காரில் அழைத்து சென்றார்.
முள்ளுக்குறிச்சி வந்தபோது, மாணவியின் தந்தை காரிலிருந்து இறங்கினார். மாணவியை மட்டும் தனியாக அழைத்துக்கொண்டு காரில் செல்லும் வழியில் மோகன், அந்த மாணவிக்கு தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
நேற்று முன்தினம் இரவு, அந்த மாணவி, எஸ்.எஸ்.ஐ., மோகன் மீது பாலியல் புகாரளித்தார். போலீசார், எஸ்.எஸ்.ஐ., மோகனை கைது செய்து விசாரிக்கின்றனர்.