/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மூன்றாண்டாக பூட்டி வைக்கப்பட்டிருந்த 'கொங்கு திருப்பதி' கோவில் திறப்பு
/
மூன்றாண்டாக பூட்டி வைக்கப்பட்டிருந்த 'கொங்கு திருப்பதி' கோவில் திறப்பு
மூன்றாண்டாக பூட்டி வைக்கப்பட்டிருந்த 'கொங்கு திருப்பதி' கோவில் திறப்பு
மூன்றாண்டாக பூட்டி வைக்கப்பட்டிருந்த 'கொங்கு திருப்பதி' கோவில் திறப்பு
ADDED : நவ 25, 2025 02:03 AM
பள்ளிப்பாளையம், தாஜ்நகர் பகுதியில், மூன்றாண்டாக பூட்டி வைக்கப்பட்டிருந்த கொங்கு திருப்பதி கோவில், பக்தர்கள் வழிபாட்டிற்காக, நேற்று திறக்கப்பட்டது.
பள்ளிப்பாளையம் அருகே, தாஜ்நகர் பகுதியில் கொங்கு திருப்பதி கோவில் உள்ளது. திருப்பதியில் உள்ளதுபோல், இக்கோவிலில் சுவாமி உள்ளதால், 'கொங்கு திருப்பதி' என அழைக்கப்படுகிறது. நாமக்கல், ஈரோடு, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்ய வந்து செல்வர். குறிப்பாக, புரட்டாசி சனிக்கிழமையில் ஏராளமான மக்கள் வந்து செல்வர்.
இந்நிலையில், இந்த கோவில், வீட்டுவசதி வாரியத்திற்கு சொந்தமான நிலத்தில் கட்டப்பட்டுள்ளதால், 'கோவில் நிலத்தை கையகப்படுத்த வேண்டும்; மீட்கப்பட்ட நிலத்தை ஏலம் விட வேண்டும்; ஏலம் யாரும் எடுக்காவிட்டால், அறநிலையத்துறையிடம் ஒப்படைக்க வேண்டும்' என, சென்னை உயர்நீதிமன்றம், மூன்றாண்டுகளுக்கு முன் தீர்ப்பு வழங்கியது.இதையடுத்த, கொங்கு திருப்பதி கோவிலை, ஈரோடு வீட்டு வசதி வாரிய அதிகாரிகள், மூன்றாண்டுகளுக்கு முன் கையகப்படுத்தி, பூட்டி வைத்தனர். தொடர்ந்து, கோவிலின் முன்புறம் தடுப்புகள் அமைக்கப்பட்டன.
அதன்பின், கோவிலை மீண்டும் வழிபாட்டிற்கு திறக்க வேண்டும் என, பல்வேறு அரசியல் கட்சியினர், பல்வேறு அமைப்புகள், பொது மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில், கடந்த, 4ல் குமாரபாளையம் அறநிலையத்துறை அதிகாரிகள், இந்த கொங்கு திருப்பதி கோவிலுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர்.
இதையடுத்து, நேற்று முன்தினம் மாலை வாஸ்து பூஜை நடந்தது. நேற்று காலை, சுதர்சன ஹோமம் நடந்தது. தொடர்ந்து, பக்தர்கள் வழிபாட்டிற்கு திறக்கப்பட்டது. மூன்றாண்டுக்கு பின், 'கொங்கு திருப்பதி' கோவில் வழிபாட்டிற்கு திறக்கப்பட்டதால், 'கோவிந்தா கோவிந்தா' என, பக்தி கோஷம் எழுப்பி, பக்தர்கள் சுவாமியை தரிசனம் செய்தனர்.

