/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
எக்ஸல் கல்லுாரி மாணவருக்கு பாராட்டு
/
எக்ஸல் கல்லுாரி மாணவருக்கு பாராட்டு
ADDED : ஆக 23, 2024 05:03 AM
குமாரபாளையம்: திருச்செங்கோடு கே.எஸ்.ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லுாரியுடன், கோவை மக்கள் சேவை மையம் மற்றும் ட்ரீம்சோன் நிறுவனம் இணைந்து நடத்திய, கைத்தறி ஆடை அலங்கார அணி வகுப்பில் வணிகவியல் மற்றும் அறிவியல் கல்லுாரியின் துகிலியல் மற்றும் ஆடை வடிவமைப்பு துறை மாணவர்கள் பங்கேற்றனர்.
கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன், மொடக்குறிச்சி எம்.எல்.ஏ., சரஸ்வதி, நடிகை குஷ்பு சுந்தர் ஆகியோர் சிறப்பாளர்களாக சிறப்பித்தனர். மொத்தம், 27 கல்லுாரிகள் பங்கேற்றன. இதில் எக்ஸல் வணிகவில் மற்றும் அறிவியல் கல்லுாரியின் துகிலியல் மற்றும் ஆடை வடிவமைப்பு துறையை சேர்ந்த மூன்றாம் ஆண்டு மாணவர் தெளபிக், இந்தாண்டின் வெற்றியாளராக 'மிஸ்டர் கைத்தறி மகாராஜா' என்ற பட்டத்தை வென்றார். கோப்பை மற்றும் ரொக்க பரிசாக, 7,500 ரூபாய் பெற்றார்.
கிளினிக்கல் லேப் டெக்னாலஜி துறை மூன்றாம் ஆண்டு மாணவி தட்சனா 'மிஸ் இன்பர்மேட்டிவ்' என்ற பட்டத்தையும், ரொக்க பரிசாக, 1,000 ரூபாய் பெற்றார். விழாவில் எக்ஸல் வணிகவியல் மற்றும் அறிவியல் கல்லுாரி அதிகபட்ச பங்கேற்பாளர்களுக்கு இரண்டாவது பரிசையும், அதிகபட்ச பார்வையாளர்களுக்கு மூன்றாவது பரிசையும் வென்றது. ஆடை அலங்கார அணிவகுப்பில், இரண்டாம் ஆண்டு இளங்கலை வணிக நிர்வாகவியல் துறை மாணவர் சஞ்சய் பங்கேற்றார்.நிறுவனத்திற்கு பெருமை சேர்த்த மாணவர்கள், பேராசிரியர்களுக்கு எக்ஸல் கல்வி நிறுவனங்களின் துணைத் தலைவர் மருத்துவர் மதன் கார்த்திக், எக்ஸல் வணிகவில் மற்றும் அறிவியல் கல்லுாரி சார்பில் முதல்வர் விமல் நிஷாந் ஆகியோர் பாராட்டு தெரிவித்தனர்.