/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
திருக்குறளை ஒப்புவித்த மாணவிக்கு பாராட்டு
/
திருக்குறளை ஒப்புவித்த மாணவிக்கு பாராட்டு
ADDED : பிப் 23, 2024 01:43 AM
நாமகிரிப்பேட்டை;நாமகிரிப்பேட்டை டவுன் பஞ்., வெள்ளக்கல்பட்டி அரசு பள்ளியில், 7ம் வகுப்பு படித்து வருபவர் மாணவி தவப்பிரியா.
இவர், மாவட்ட தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனர் அலுவலகத்தில், 1,330 திருக்குறளையும் பிழையின்றி ஒப்புவித்தார். எந்த அதிகாரத்தை கேட்டாலும் சொல்வதுடன், குறள் எண்ணை குறிப்பிட்டாலும் அதற்கான குறளை கூறிவிடுவார். 1,330 குறளையும் பிழையின்றி சொல்லிய மாணவிக்கு, தலைமை ஆசிரியர் சுந்தரம் சால்வை அணிவித்து பரிசு வழங்கினார். அதேபோல், மாணவிக்கு உதவிய மறைந்த தமிழாசிரியர் மகன் செந்தில் செல்வன், இணைய வழியில் மாணவிக்கு பயிற்சி அளித்த காமராஜ் மற்றும் உலக திருக்குறள் முற்றோதல் இயக்க ஒருங்கிணைப்பாளர் கொழந்தைவேல் ராமசாமி, பெற்றோர் ஆசியர் கழக உறுப்பினர்களுக்கு, தலைமை ஆசிரியர் நன்றி தெரிவித்தார்.