/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
களிமண்ணால் தயாரிக்கப்பட்ட அடுப்பு, பானை இலவசமாக வழங்க குலாலர் சங்கம் கோரிக்கை
/
களிமண்ணால் தயாரிக்கப்பட்ட அடுப்பு, பானை இலவசமாக வழங்க குலாலர் சங்கம் கோரிக்கை
களிமண்ணால் தயாரிக்கப்பட்ட அடுப்பு, பானை இலவசமாக வழங்க குலாலர் சங்கம் கோரிக்கை
களிமண்ணால் தயாரிக்கப்பட்ட அடுப்பு, பானை இலவசமாக வழங்க குலாலர் சங்கம் கோரிக்கை
ADDED : நவ 11, 2025 06:42 AM
நாமக்கல்: 'தை பொங்கல் அன்று வேட்டி, சேலை வழங்குவதுபோல், களிமண்ணால் தயாரிக்கப்பட்ட அடு ப்பு, பானை ஆகியவற்றை இலவசமாக வழங்கி, எங்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த வேண்டும்' என, நாமக்கல் மாவட்ட குலாலர் சங்க, மாவட்ட தலைவர் சிங்காரவேலு, பொருளாளர் தங்கராசு, மாநில துணைத்-தலைவர் தனபால் ஆகியோர், நாமக்கல் கலெக்டர் துர்கா மூர்த்தி-யிடம் மனு அளித்தனர்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது: நாமக்கல் மாவட்டத்தில், மண்பாண்ட தொழிலாளர்களுக்கு, மழைக்கால நிவாரண தொகை வழங்க, 936 மனுக்கள் அரசுக்கு அனுப்பி உள்ளோம். அதில், 226 மனுக்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டது. மேலும், நிலு-வையில் உள்ள மனுக்களுக்கும் நிவாரண தொகை அரசு வழங்க வேண்டும்.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள மண்டபாண்ட தொழிலாளர்க-ளுக்கு சூலைமேடு பகுதி க்கு அடிமனை பட்டா வழங்க வேண்டும். எங்கள் தொழில் வளம்பெற, தை பொங்கல் அன்று வேட்டி, சேலை வழங்குவதுபோல், களிமண்ணால் தயாரிக்கப்-பட்ட அடுப்பு, பானை ஆகியவற்றை எங்களிடம் கொள்முதல் செய்து பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கி, எங்களின் வாழ்-வாதாரத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மண்பாண்ட தொழிலாளர்கள் நலவாரிய உறுப்பினர்களுக்கு கிடைக்க வேண்டிய கல்வி உதவித்தொகை, திருமண உதவித்-தொகை மற்றும் நலத்திட்டங்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்கள் தொழிலாளர்கள் குழந்தைகளுக்கு, கல்வியில் இடைஒதுக்கீடு முன்னுரிமை அளித்தும், மழைக்கால நிவாரணத்-தொகை, 8,000 ரூபாயாக உயர்த்தி வழங்க, தமிழக முதல்வர் நட-வடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

