sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 11, 2025 ,ஐப்பசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

வனத்துறை மூலம் தனியார் நிலங்களில் தேக்கு, செம்மர கன்று இலவசமாக நடவு

/

வனத்துறை மூலம் தனியார் நிலங்களில் தேக்கு, செம்மர கன்று இலவசமாக நடவு

வனத்துறை மூலம் தனியார் நிலங்களில் தேக்கு, செம்மர கன்று இலவசமாக நடவு

வனத்துறை மூலம் தனியார் நிலங்களில் தேக்கு, செம்மர கன்று இலவசமாக நடவு


ADDED : நவ 11, 2025 02:18 AM

Google News

ADDED : நவ 11, 2025 02:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல், 'வனத்துறை மூலம் விருப்பமுள்ள தனியார் நிலங்களில், தேக்கு, மகாகனி, செம்மரம், சந்தனம் உள்ளிட்ட மரக்கன்றுகள் இலவசமாக நடப்படும்' என, நாமக்கல் கலெக்டர் துர்கா மூர்த்தி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:

விவசாயிகளுக்கு ஒரு நிலையான மற்றும் லாபகரமான பொருளாதார நிலையை உருவாக்கும் வகையில், தமிழக வனத்துறை பல்வேறு திட்டப்பணிகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், நடப்பாண்டில், அத்தனுாரில் செயல்படும் வனவியல் விரிவாக்க மையத்தில், தமிழக பல்லுயிர் பாதுகாப்பு மற்றும் காலநிலை மாற்றத்திற்கான பசுமை திட்டத்தின் கீழ், தேக்கு, மகாகனி, செம்மரம், வேம்பு, சந்தனம் உள்ளிட்ட பல இன செடிகள் உற்பத்தி செய்யப்பட்டு, நடவு செய்ய தயார் நிலையில் உள்ளன.

இத்திட்டத்தின் கீழ், தனியார் நிலங்களில் ஓராண்டுக்கு மேல் தரிசாக, விவசாய பயன்பாட்டிற்கு அல்லாத வருவாய் இல்லாமல் இருக்கும் நிலங்களையும், மற்ற விவசாய நிலங்களின் வயல் முழுவதும் மற்றும் வரப்பு பகுதியிலும், விவசாயம் ஏதும் பாதிக்காத வகையில் மரக்கன்றுகள் அத்தனுார் வனவியல் விரிவாக்க மையம் மூலம் இலவசமாக நடவு செய்து தரப்பட உள்ளது. ஆர்வமுள்ள விவசாயிகள், வனச்சரக அலுவலரை, 8940133289 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொண்டு பயன் பெறலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us