/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
வெண்ணந்துார் விசைத்தறி துணி உற்பத்தியாளர்கள் சங்க செயற்குழு
/
வெண்ணந்துார் விசைத்தறி துணி உற்பத்தியாளர்கள் சங்க செயற்குழு
வெண்ணந்துார் விசைத்தறி துணி உற்பத்தியாளர்கள் சங்க செயற்குழு
வெண்ணந்துார் விசைத்தறி துணி உற்பத்தியாளர்கள் சங்க செயற்குழு
ADDED : நவ 11, 2025 02:17 AM
நாமக்கல், ராசிபுரம் தாலுகா, வெண்ணந்துாரில் விசைத்தறி துணி உற்பத்தியாளர்கள் சங்க செயற்குழு கூட்டம் நடந்தது.
தலைவர் சுப்ர
மணியம் தலைமை வகித்தார். துணைத்தலைவர் செல்வம் வரவேற்றார். செயலாளர் காசிபெருமாள், முன்னாள் பொருளாளர் சிங்காரம் ஆகியோர் முன்னிலை
வகித்தனர். கூட்டத்தில், விசைத்தறி தொழில் பெரும் பின்னடவை சந்தித்து வருகிறது. அதனால், மத்திய அரசு ஜவுளி ஏற்றுமதியில் முழுகவனம் செலுத்த வேண்டும்.
மேலும், ஜவுளி துறைக்கு தனி அமைச்சரை நியமிக்க வேண்டும். வெண்ணந்துாரில் இருந்து, நாமக்கல் நகருக்கு நேரடியாக டவுன் பஸ் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முன்னதாக, வெண்ணந்துாரில் புதிதாக கற்களால் கட்டப்பட்டு வரும் முத்துகுமாரசாமி, பூபதி மாரியம்மன், பாவடி விநாயகர் கோவில் திருப்பணிக்காக, விசைத்தறி சங்கம் சார்பில், ஐந்து லட்சம் ரூபாய் வழங்கப்
பட்டது.