/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
போதை தடுப்பு, நிதி நிறுவன அத்துமீறல் குமாரபாளையம் போலீசார் விழிப்புணர்வு
/
போதை தடுப்பு, நிதி நிறுவன அத்துமீறல் குமாரபாளையம் போலீசார் விழிப்புணர்வு
போதை தடுப்பு, நிதி நிறுவன அத்துமீறல் குமாரபாளையம் போலீசார் விழிப்புணர்வு
போதை தடுப்பு, நிதி நிறுவன அத்துமீறல் குமாரபாளையம் போலீசார் விழிப்புணர்வு
ADDED : நவ 23, 2024 01:43 AM
போதை தடுப்பு, நிதி நிறுவன அத்துமீறல்
குமாரபாளையம் போலீசார் விழிப்புணர்வு
குமாரபாளையம், நவ. 23-
குமாரபாளையம் போலீசார் சார்பில் போதைப்பொருள் தடுப்பு, நிதி நிறுவன அத்துமீறல் குறித்த விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி இன்ஸ்பெக்டர் தவமணி தலைமையில் நடந்தது.
குமாரபாளையம் பகுதியில் பல நிதி நிறுவனங்களில் கடன் வாங்கிய பொதுமக்கள், அதனை திருப்பி செலுத்த முடியாமல் தற்கொலை செய்து கொள்ளுதல், தற்கொலைக்கு முயற்சி செய்தல், உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு வந்தனர். இதுபோன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என, கலை நிகழ்ச்சி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் கலந்துகொண்ட, குமாரபாளையம் இன்ஸ்பெக்டர் தவமணி பேசியதாவது:
குடும்ப சூழ்நிலைக்கு கடன் வாங்குகிறோம். ஆனால், உரிய காலத்தில் கடனை திருப்பி செலுத்த முடியாமல் போகும் நிலை பலருக்கும் உருவாகிறது. இதற்காக தற்கொலை என்பது தீர்வாகாது. நிதி நிறுவன அதிகாரிகள் உங்களை வந்து கேட்டால், போலீஸ் ஸ்டேஷன் வந்து எங்களிடம் கூறுங்கள். அவர்களிடம் பேசி சுமுக தீர்வு காணலாம். அதைவிட்டு தற்கொலை முடிவுக்கு போக கூடாது. மேலும், சிறுவர்கள், மாணவ, மாணவியர் போதை பொருட்களுக்கு அடிமையாகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். புகையிலை பொருட்கள் விற்றால் போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
எஸ்.ஐ., தங்கவடிவேல், எஸ்.எஸ்.ஐ.,க்கள் குணசேகரன், மாதேஸ்வரன், ராம்குமார், பழனிச்சாமி உள்பட பலர் பங்கேற்றனர்.