/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
முத்துசாமி கோவிலில் கும்பாபிஷேக விழா
/
முத்துசாமி கோவிலில் கும்பாபிஷேக விழா
ADDED : ஜன 27, 2024 04:08 AM
மோகனுார்: மோகனுார் தாலுகா, ஆரியூரில் அமைந்துள்ள கணபதி, சப்த கன்னிமார், முத்துசாமி மற்றும் கருப்பண்ண சுவாமி ஆலய கும்பாபிஷேக முதலாம் ஆண்டு விழா, நேற்று கோலாகலமாக நடந்தது. விழாவை முன்னிட்டு, நேற்று காலை, 7:00 மணிக்கு, மோகனுார் காவிரி ஆற்றுக்கு சென்ற பக்தர்கள், புனித நீராடி தீர்த்தக்குடம் எடுத்து வந்தனர். தொடர்ந்து, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது.
இதையடுத்து, வெள்ளி கவசம் சாற்றி, மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. மாலை, 6:00 மணிக்கு, மாவிளக்கு பூஜையும், 1,008 குத்து விளக்கு பூஜையும் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமியை வழிபட்டனர். ஏற்பாடுகளை மணியன் குலம், கண்ணந்தை குல குடிப்பாட்டு மக்கள், ஆரியூர் கிராம கொங்கு வெள்ளாளர் வழிபாட்டு மக்கள் மற்றும் நிர்வாககுழுவினர் செய்திருந்தனர்.

