/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ராமர் கோவில் கும்பாபிஷேக விழா நாமக்கல்லில் கிரிவலத்துக்கு ஏற்பாடு
/
ராமர் கோவில் கும்பாபிஷேக விழா நாமக்கல்லில் கிரிவலத்துக்கு ஏற்பாடு
ராமர் கோவில் கும்பாபிஷேக விழா நாமக்கல்லில் கிரிவலத்துக்கு ஏற்பாடு
ராமர் கோவில் கும்பாபிஷேக விழா நாமக்கல்லில் கிரிவலத்துக்கு ஏற்பாடு
ADDED : ஜன 22, 2024 12:25 PM
நாமக்கல்: ராமர் கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி, நாமக்கல்லில் கிரிவலம் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அயோத்தியில் இன்று ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடக்கிறது. இதையொட்டி, நாடு முழுவதும் கோவில் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சிறப்பு பூஜை, நிகழ்ச்சிகள் நடத்த ஹிந்து அமைப்புகள் ஏற்பாடு செய்து வருகின்றன.
நாமக்கல் ஆன்மிக இந்து சமய பேரவை, ஐயப்ப சுவாமி அறக்கட்டளை, பாரத அன்னை சேவா டிரஸ்ட், ஹிந்து தர்ம சக்தி ஆகியவைகளை இணைத்து நாமக்கல் மாவட்ட ஆன்மிக ஹிந்து கூட்டமைப்பு சார்பில், சிறப்பு நிகழ்ச்சி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காலை, 8:30 மணிக்கு, நாமக்கல் நரசிம்மர் கோவிலில் உள்ள ராமர் சீதா கோவிலில் சிறப்பு அபிஷேக பூஜை நடக்கிறது.
தொடர்ந்து பிரசாதம் வழங்கப்படுகிறது. மாலை, 4:30 மணிக்கு ராமர், சீதை அலங்காரத்தில் நாமக்கல் மலையை சுற்றி கிரிவலம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து மாலை, 6:30 மணிக்கு ரங்கநாதர் கோவில் படிவாசல் அடிவாரத்தில் சிறப்பு ஆன்மிக சொற்பொழிவு நடக்கிறது.