/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பெரிய மாரியம்மன், செல்லாண்டி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்
/
பெரிய மாரியம்மன், செல்லாண்டி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்
பெரிய மாரியம்மன், செல்லாண்டி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்
பெரிய மாரியம்மன், செல்லாண்டி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்
ADDED : ஆக 29, 2025 01:39 AM
வெண்ணந்துார் :வெண்ணந்துார் அருகே, எட்டுப்பட்டி பெரிய மாரியம்மன் மற்றும் செல்லாண்டியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபட்டனர்.
வெண்ணந்துார் அருகே அலவாய்ப்பட்டி கிராமத்தில், எட்டுப்பட்டி பெரிய மாரியம்மன் மற்றும் செல்லாண்டியம்மன் கோவில் உள்ளது. பழமையான இக்கோவில் புனரமைக்கப்பட்டு கும்பாபிஷேக விழா நடத்த முடிவு செய்யப்பட்டது. கும்பாபிஷேக விழா கடந்த 13-ம் தேதி முகூர்த்த நாள் நடப்பட்டு தொடங்கியது. 18 ஆண்டுகளுக்கு ஒரு முறை அஷ்டபந்தன கும்பாபிஷேகம் நேற்று நடந்தது.
இதை முன்னிட்டு விக்னேஸ்வர பூஜை, கோ பூஜை, இரண்டாம் கால யாக சாலை பூஜை உட்பட பல்வேறு சிறப்பு பூஜைகள் நடந்தன. தொடர்ந்து, பெரிய மாரியம்மன் மற்றும் செல்லாண்டியம்மன் சிலைக்கு புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. வெண்ணந்துார், ஓ.சவுதாபுரம், நடுப்பட்டி, தொட்டியபட்டி, அத்தனுார் பகுதி மக்கள் கலந்து கொண்டனர்.