/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
தீபாவளி பண்டிகையையொட்டி ரூ.1,400க்கு விற்ற குண்டுமல்லி
/
தீபாவளி பண்டிகையையொட்டி ரூ.1,400க்கு விற்ற குண்டுமல்லி
தீபாவளி பண்டிகையையொட்டி ரூ.1,400க்கு விற்ற குண்டுமல்லி
தீபாவளி பண்டிகையையொட்டி ரூ.1,400க்கு விற்ற குண்டுமல்லி
ADDED : அக் 31, 2024 06:38 AM
நாமக்கல்: தீபாவளி பண்டிகையையொட்டி, நாமக்கல் பூ மார்க்கெட்டில், பூக்கள் விலை பலமடங்கு அதிக-ரித்துள்ளது. ஒரு கிலோ குண்டு மல்லி, 1,400 ரூபாய்க்கு விற்பனையானது.நாமக்கல் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிக-ளான அணியாபுரம், மோகனுார், எருமப்பட்டி, வரகூர் உள்ளிட்ட பகுதிகளில், குண்டுமல்லி, முல்லை, சம்பங்கி, அரளி, ரோஸ், ஜாதி மல்லி, கொண்டை பூ உள்ளிட்ட பூக்கள் சாகுபடி செய்யப்-படுகின்றன.
அவற்றை, அறுவடை செய்து, நாமக்கல் பஸ் ஸ்டாண்டில் அமைந்துள்ள பூ மார்க்கெட்டில் தினசரி ஏலத்திற்கு கொண்டு வருகின்றனர். விசேஷ நாட்களான திருமணம், திருவிழா, ஆயு-தபூஜை, தீபாவளி, பொங்கல் போன்ற நாட்களில், பூக்கள் விலை உயர்வும், சாதாரண நாட்களில், குறைவதும் வாடிக்கை. அதேபோல், உற்பத்தி அதிகமாக இருக்கும் காலங்களில், விலை சரிவும், குறையும் நிலையில், விலை அதிகரிக்கும்.தற்போது, தீபா-வளி பண்டிகையையொட்டி, பூக்கள் விலை கிடு-கிடுவென உயர்ந்துள்ளது. கடந்த வாரம், ஒரு கிலோ குண்டுமல்லி, 280 ரூபாய், முல்லை, 140 முதல், 180 ரூபாய், சம்-பங்கி, 40 ரூபாய், அரளி, 100 ரூபாய், ரோஸ், 60 ரூபாய், ஜாதி மல்லி, 320 ரூபாய்க்கு விற்பனை-யானது. நேற்று, குண்டுமல்லி, 1,400 ரூபாய், முல்லை, 1,000 முதல், 1,200 ரூபாய், சம்பங்கி, 160 ரூபாய், அரளி, 230 ரூபாய், ரோஸ், 120 ரூபாய், ஜாதிமல்லி, 600 ரூபாய்க்கு ஏலம் போனது. தீபா-வளி பண்டிகையையொட்டி பூக்கள் தேவை அதி-கரித்துள்ளதால், அதன் விலையும், பலமடங்கு உயர்ந்துள்ளது. அதனால், விவசாயிகள், வியா-பாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.