/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ஆடிப்பெருக்கு விழாவை ஒட்டி ரூ.700க்கு விற்ற குண்டுமல்லி
/
ஆடிப்பெருக்கு விழாவை ஒட்டி ரூ.700க்கு விற்ற குண்டுமல்லி
ஆடிப்பெருக்கு விழாவை ஒட்டி ரூ.700க்கு விற்ற குண்டுமல்லி
ஆடிப்பெருக்கு விழாவை ஒட்டி ரூ.700க்கு விற்ற குண்டுமல்லி
ADDED : ஆக 03, 2024 01:36 AM
ப.வேலுார், ஆடிப்பெருக்கு விழாவையொட்டி, ப.வேலுாரில் நேற்று நடந்த பூக்கள் ஏலத்தில், குண்டுமல்லி கிலோ, 700 ரூபாய்க்கு விற்பனையானது.
நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலுாரில் குண்டுமல்லி, முல்லை, சம்பங்கி, சாமந்தி, அரளி பூக்கள் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகின்றன. இவற்றை விவசாயிகள் அறுவடை செய்து, ப.வேலுாரில் உள்ள பூ உற்பத்தியாளர் சங்கத்திற்கு தினமும் கொண்டு வந்து ஏலத்தில் விற்பனை செய்கின்றனர். தற்போது குண்டுமல்லி விளைச்சல் குறைந்துள்ளது.
இந்நிலையில், இன்று ஆடிப்பெருக்கு விழாவையொட்டி, நேற்று ப.வேலுாரில் உள்ள பூ உற்பத்தியாளர் சங்கத்தில் நடந்த ஏலத்தில், கடந்த வாரம், 300 ரூபாய்க்கு விற்ற ஒருகிலோ குண்டுமல்லி, நேற்று 700 ரூபாய், 50 ரூபாய்க்கு விற்ற சம்பங்கி, 280 ரூபாய், 70 ரூபாய்க்கு விற்ற அரளி, 220 ரூபாய், 80 ரூபாய்க்கு விற்ற சாமந்தி, 200 ரூபாய், 300 ரூபாய்க்கு விற்ற முல்லை, 600 ரூபாய்க்கு விற்பனையாகின.
ஆடி, 18 விழாவை முன்னிட்டு பூக்கள் தேவை அதிகரித்ததால், விலை உயர்ந்ததாக விவசாயிகள் தெரிவித்தனர்.