/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
குறிஞ்சி பள்ளி மாணவர்கள் 10ம் வகுப்பு தேர்வில் சாதனை
/
குறிஞ்சி பள்ளி மாணவர்கள் 10ம் வகுப்பு தேர்வில் சாதனை
குறிஞ்சி பள்ளி மாணவர்கள் 10ம் வகுப்பு தேர்வில் சாதனை
குறிஞ்சி பள்ளி மாணவர்கள் 10ம் வகுப்பு தேர்வில் சாதனை
ADDED : மே 11, 2024 11:26 AM
நாமக்கல்: நாமக்கல் - பரமத்தி ரோடு, காவேட்டிபட்டியில் குறிஞ்சி மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு, 2024ம் கல்வியாண்டில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவி ரவீனா ராகவி, 500க்கு, 494 மதிப்பெண் பெற்று பள்ளியில் முதலிடம், நித்தியஸ்ரீ, 500க்கு, 491 மதிப்பெண் பெற்று இரண்டாமிடம், விஸ்மிதா, 500க்கு, 489 மதிப்பெண் பெற்று மூன்றாமிடம், ஸ்ரீஅஸ்வின், 500க்கு, 488 மதிப்பெண் பெற்று நான்காம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளனர்.
இவர்களை, தாளாளர் தங்கவேல், இயக்குனர்கள் இனிப்பு வழங்கி பாராட்டு தெரிவித்தனர். மேலும், பள்ளி முதல்வர், தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் ஆகியோர், மாணவர்களை பாராட்டினர்.